சேது சமுத்திரம் - எத்தனை சதவிகிதம் ? !!! ?



ஒருமுறை இந்திய அமைச்சரும் ஜப்பான் அமைச்சரும் , ஜப்பான் நதியில் படகில் பிரயாணித்தார்கள்.
அப்போது ஒரு பாலத்தை கடந்தார்கள். அப்போது ஜப்பான் அமைச்சர், மேலே பாருங்கள் என்ன தெரிகின்றது என்றார் . இந்திய அமைச்சர், இரும்பிலான பாலம் தெரிவதாக சொன்னார் . ஜப்பான் அமைச்சர் சிரித்துக் கொண்டே, 'பத்து சதவிகிதம்' என்றார். பின் மேலும், இந்த பாலம் கட்டி முடிப்பதில் பத்து சதவிகிதம் ஊழல் செய்யப்பட்டு, கட்டி முடித்த கணக்கில் சேர்க்க பட்டது என்றார்.

வருடங்கள் உருண்டோடின ......

அதே ஜப்பான் அமைச்சர் இந்தியா வந்தார். இந்திய அமைச்சரும் ஜப்பான் அமைச்சரும், பின் மாலைப் பொழுதில் படகில் ஏறி நதியில் சென்றனர். ஒரு இடத்தில நதி குறுகிய இடத்தில், இந்திய அமைச்சர், மேலே பாருங்கள் என்ன தெரிகின்றது என்றார் ... ஜப்பான் அமைச்சர், மேலே பார்த்து, நீல வானம் தெரிகின்றது அதிலே சில நட்சத்திரங்களும் தெரிய ஆரம்பிக்கின்றன, மேகம் மூட்டமாய் இருக்கின்றது மழை வர கூடும் என்றார்.
இந்திய அமைச்சர் சற்று நேரம் அமைதியாய் இருந்து விட்டு, 'நூறு சதவிகிதம்' என்றார்.

இந்தியாவில் இது எல்லாம் சாத்தியமே, இங்கே உயிருடன் இருப்பவரும் இறப்பு சான்றிதழ் வாங்க முடியும் போது, இரு கண் இல்லாதவருக்கும் ஓட்டுனர் உரிமம் தரும் போது, இறந்தவரும் வாக்காளர் அடையாள அட்டையோடு ஓட்டு போடும் போது 'நூறு சதவிகிதம்' சாத்தியமே.

பாலங்களிலும் ஊழல். ஆம் நகரத்தில் மக்களுக்கு மத்தியில் நிலத்தில் தெள்ளென தெரியும் பாலங்களிலேயே ஊழல்.

அப்படி இருக்கையில், கடலில் இருக்கும் கண்ணுக்கு அகப்படாத சேதுவை மேடுருத்துவதில் 'எத்தனை சதவிகிதமோ ?'

எப்படியும் சாலை மற்றும் கப்பல் துறை அமைச்சகம் மீண்டும் தமிழகத்திற்கே கிடைக்க கூடும்.
ஆனாலும் சென்ற முறை மாதிரி புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஊடகத்திற்கு காட்டி, மிரட்டி வேண்டுமானால் வாங்காமல் இருக்கலாம்.

மீண்டும்,
ராமர் எந்த கல்லூரியில் M.E. (Marine Engineering) படித்தார் என்று தலைவர்களால் கேட்கப் படலாம். அதுதான் ஐந்து வருடம் முடிந்து விட்டதே, ஒரு வேலை இந்த ஐந்து வருடத்தில் ராமர் B.E (Marine Engineering) முடித்திருக்க கூடும் என்று எண்ணி இருக்கலாம்.

பாரதியின் கனவு 'சேதுவை மேடுறுத்தி வீதி செய்வோம்'. சேது சமுத்திர திட்டம் நல்ல திட்டமே.
அதை செயல் படுத்தும் கூட்டம் 'சதவிகிதம்' பாராமல் சாதித்தால் மெச்சுவோம் !

எப்படியும், 'எத்தனை சதவிகிதம் ?' என்று தெரிந்து கொள்வதால் இந்திய பிரஜைகளுக்கு ஏதேனும் பிரயோஜனம் உண்டோ இல்லையோ, ஸ்விஸ் நாட்டு மக்களுக்கு பெருத்த பிரயோஜனம் உண்டு.

பின்னே, 'எத்தனை சதவிகிதம்?' என்பதால் ஸ்விஸ் வங்கிக்குதானே லாபம்!

ஹரீஷ்

0 comments:

Post a Comment

நோக்கம் !

- எண்ணங்களை எழுதுவது

- நயம்பட நகைச்சுவையாய் எழுதுவது

- எளிதினும் எளிதாய் எழுதுவது

பொன்னியின் செல்வன்

My photo
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
பெரியார் கொள்கை பற்றாளன் | தமிழன் | திராவிடன் | பகுத்தறிவாளன் | நாத்திகன் | பூர்வீகம் : திருவாரூரில், கமுகக்குடி எனும் அழகிய ஆற்றோர கிராமம்.

மெயிலில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

நறுமனம்

பிற தோட்டம்