இலண்டனில் பொங்கல் விழா !

இலண்டனில் பொங்கல் விழா !

லண்டன் தமிழர் முன்னேற்றக் கழகமும், திருவள்ளுவர் தமிழ் பள்ளியும் இணைந்து இந்த ஆண்டு, கடந்த ஜனவரித் திங்கள் 31ஆம் நாள், தமிழர் திருநாளாகிய பொங்கல் திருநாள் தலைவர் பூ.நாகதேவன் தலைமையில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

உழவுத் தொழிலையும், உழவரையும், இயற்கையையும் போற்றும் தமிழரின் தனி அடையாளமான சமத்துவ பொங்கல் விழாவினை ஒவ்வொரு ஆண்டும் இலண்டனில் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

செயலாளர் இர.அன்பழகன் விழாவிற்கு வந்திருந்தோரை வரவேற்று உரையாற்றினார்.

பொங்கல் விழாவை ஆடல், பாடல், கவிதை, திருக்குறள் சொற்பொழிவு போன்ற கலை நிகழ்ச்சிகளோடு மகிழ்ச்சியாக கொண்டாடினர்.கலை நிகழ்ச்சிகளை திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மிகச் சிறப்பாக வழங்கினார்கள்.

வ்விழாவில், முனைவர் மு.இளங்கோவன் எழுதி இயக்கிய 'பன்னாராய்ச்சி வித்தகர்' குடந்தை ப.சுந்தரேசனார் பற்றிய ஆவணப்பட முன்னோட்ட காட்சிகள் திரையிடப்பட்டது. பின்னர், இந்த ஆவணப்படத்தை தமிழர் முன்னேற்றக் கழக தலைவர் திரு பூ.நாகதேவன் வெளியிட, திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியை திருவாட்டி தவமணி மனோகரன் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.

இவ்விழாவில் 600க்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கு வந்திருந்தோருக்கு பொங்கல் மற்றும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. செயற்குழு உறுப்பினர் பூபதி ராஜ் நன்றி உரை நிகழ்த்த, நிகழ்ச்சி இனிதே முடிந்தது.



நோக்கம் !

- எண்ணங்களை எழுதுவது

- நயம்பட நகைச்சுவையாய் எழுதுவது

- எளிதினும் எளிதாய் எழுதுவது

பொன்னியின் செல்வன்

My photo
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
பெரியார் கொள்கை பற்றாளன் | தமிழன் | திராவிடன் | பகுத்தறிவாளன் | நாத்திகன் | பூர்வீகம் : திருவாரூரில், கமுகக்குடி எனும் அழகிய ஆற்றோர கிராமம்.

மெயிலில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

நறுமனம்

பிற தோட்டம்