விகடன் > தி ஹிந்து > தினமணி > தினமலர்


து என்ன, விகடன் > தி ஹிந்து > தினமணி > தினமலர் என்ற தலைப்பு இருக்கிறதே என்று வியப்புற தேவையில்லை. 

ஒரே செய்தியானது விகடன் இணையதளத்திலும், தி ஹிந்து இணையதளத்திலும், தினமணி இணையதளத்திலும், தினமலர்  இணையதளத்திலும் வெளிவந்துள்ளது. நன்று! செய்தி வெளியிடுவதுதானே பத்திரிகையின் வேலை; உனக்கென்ன வந்தது என்கிறீர்களா?

என்னவென்றால், பத்திரிகை உலகில் ஒரு தாரக மந்திரமாக சொல்வது 'Entertain Educate Empower' என்பதாகும். இவற்றோடு, காதில் பூ சுற்றுவதையும் சேர்த்துக் கொள்ளலாம் போலும் இப்போது!

வள வள வென்று பேசாமல் விஷயத்திற்கு வருவோம்.

செய்தி இதுதான் - வரும் செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி, அயோத்தியாவில் உள்ள பாபர் மசூதி பற்றிய முக்கிய தீர்ப்பு வெளிவர இருக்கிறது. அந்தத் தீர்ப்பு சம்பந்தபட்ட விஷயத்தில் தான் விகடன் > தி ஹிந்து > தினமணி > தினமலர்.

ஆதாரம்: கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்து செய்தியை வாசிக்கலாம்.
  1. விகடன்
  2. தி ஹிந்து
  3. தினமணி
  4. தினமலர்

புகைப்பட ஆதாரம்: 
ஒரே செய்தி; பத்திரிகை உலக ஜாம்பவான்கள் என்று சொல்லிக் கொள்கின்ற
நான்கு பத்திரிகைகளும், தள்ளுபடி செய்யப்பட்ட பொது நல மனுவுக்கு அபராதத் தொகையை வெவ்வேறாக கூறுகின்றனவே!

இந்தியாவே எதிர்பார்க்கும் ஒரு முக்கியமான செய்தியில் இப்படித் தவறுகள் நேரலாமா?

எப்படிப் பார்த்தாலும், மேல் கூறிய நான்கு பத்திரிக்கைகளில் மூன்று பத்திரிகை கூறிய அபராதத் தொகை தவறுதான். ஏனென்றால், எந்த கனிதத்திலும் 'ஐம்பதாயிரமும்' 'இரண்டு லட்சமும்' 'ஐந்து லட்சமமும்' 'பத்து லட்சமும்' எந்த வகையிலும் சமம் இல்லை! ராமானுஜர், 'இரண்டும்' 'ஐந்தும்' 'பத்தும்' சமம் என்று ஏதேனும் தேற்றம்(Theorem) கண்டு பிடித்தாரோ என்னவோ! 

தி ஹிந்து பத்திரிகை மட்டும் 'proposed a fine' என்று கூறியிருப்பதால் சற்றே  திருத்தி வெளியிட வாய்ப்பு இருக்கிறது. அப்படிப் பார்த்தாலும்,  தினமலர், தினமணி அல்லது விகடன் 'அபராதத் தொகை' விவரத்தில் தவறு செய்து இருக்கிறது!

தவறு கண்டுபிடிப்பது அல்ல நம் வேலை. மாறாக தவறைத் திருத்த வேண்டும் என்பது தான் நமது கவலை! மேலும் தீர்ப்பு வெளியானவுடன் இந்த பத்திரிக்கைகள் நேர்மையான உண்மையான தகவல் தருவார்கள் என்று எப்படி நம்ப முடியும்?

இந்த வேளையில் இதைப் பகிர்வது சிறப்பாக இருக்கும்:
வரலாற்று பதிவாகவும், உண்மையாகவும், நேர்மையாகவும், நாணயத்துடனும், ஆதார பூர்வமாகவும், அறிவு வளர்ச்சிக்காகவும்; செய்தி வெளியிடும் நாளிதழாக இருக்கும், தந்தை பெரியார் தொடங்கிய விடுதலை நாளிதழ்தான் மதச்சார்பின்மை தொடர்பாக நாம் நம்பும் ஒரே நாளிதழாய் இருப்பதில் வியப்பொன்றுமில்லை! இவற்றைக் கொண்டு ஒரு பத்திரிகையின் தரத்தை நிர்னயம் செய்ய வேண்டுமென்றால்
விடுதலை  >  மற்ற பத்திரிக்கைகள் + நாளிதழ்கள்


உண்மையுடன்
தஞ்சை வாஞ்சி

நோக்கம் !

- எண்ணங்களை எழுதுவது

- நயம்பட நகைச்சுவையாய் எழுதுவது

- எளிதினும் எளிதாய் எழுதுவது

பொன்னியின் செல்வன்

My photo
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
பெரியார் கொள்கை பற்றாளன் | தமிழன் | திராவிடன் | பகுத்தறிவாளன் | நாத்திகன் | பூர்வீகம் : திருவாரூரில், கமுகக்குடி எனும் அழகிய ஆற்றோர கிராமம்.

மெயிலில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

நறுமனம்

பிற தோட்டம்