சுயமரியாதைத் திருமணம் !

வணக்கம்,

என் பெயர் ஹரிஷ் கமுகக்குடி மாரிமுத்து.

லண்டனில் வாழ்கிறேன்.

Software Engineer.

நிற்க ...

இது எங்க சுயமரியாதைத் திருமண காணொளி.
இதனை பகிர்ந்து, சுயமரியாதைத் திருமணம் எப்படி  இருக்கும்ன்னு பல்லாயிர கணக்கானோருக்கு தெரிய வைச்சதுக்கு நன்றி.

எங்கள் சுயமரியாதைத் திருமணம் நடக்கும் முன்னர் தயாரித்த, ஏன் 'சுயமரியாதைத் திருமணம்'ங்கிற கட்டுரை இது : 


சுயமரியாதைத் திருமணம் எங்கள் விருப்பப்படி, அய்யர் (பிராமணர்/பார்ப்பனர்) இல்லாமல் நடத்தனுங்கறதுதான் மிக முக்கிய குறிக்கோள்.

ஏன்னா - இந்து திருமண முறையில சொல்ற வேத சமஸ்கிருத மந்திரத்தோட பொருள் - மணப்பெண்ண மூனு ஆம்பள கடவுளுக்கு கல்யாணம் செஞ்சிட்டு அப்புறமா நாலாவது புருசனா மணமகன திருமணம் செஞ்சு வெக்கிறாங்க. அது எங்கள் சுயமரியாதைக்கு இழுக்குன்னு நாங்க நெனக்கிறோம். நெறய பேரு இத தெரியாமலேயே 'இந்து' முறைப்படி வேத சமஸ்கிருத முறையில் திருமணம் செய்யறாங்க.

எந்த பெண்ணாவது தனக்கு தாலி கட்டிய புருசன், நாலாவது கணவன் அப்படின்னா, ஆணுக்கு சுயமரியாதை பொத்துக்குதோ இல்லயோ பெண்ணுக்காவது சுயமரியாதை வேணாமா!

எங்கள் திருமணம், எங்க ஆத்தா எங்க பெற்றோர் ( பையன் வீடு, பொன்னு வீடு) ஆகியோர் விருப்பப்படி நல்ல நேரத்திலேயே குறிக்கப்பட்டது மற்றும் தாலி அணிவித்தே திருமணமும் நடந்த  விருப்ப பட்டாங்க.

எங்கள் சுயமரியாதை திருமணத்தை தலைமை ஏத்து ஆசிரியர் நடத்தி வெச்சாங்க. அதுவும் நல்ல நேரம்ன்னு சொல்ற நேரம் முடிஞ்சவொன்னதான் தாலி எடுத்து கொடுத்தாங்க.

திருமணம் முடிஞ்சவுடன், ஆசிரியர்கிட்ட "அய்யா தாலி கட்டாம திருமணம் செய்ய முடியலங்க அய்யா" ன்னேன்.

அதுக்கு ஆசிரியர், "அதெல்லாம் பரவாயில்லை. பெற்றோருக்கும் சங்கடமில்லாம நடந்துக்கனும். அப்பறமா மனசொத்து நீங்க விருப்பப்படும் போது கழட்டிக்குங்க. அவ்ளோதான் !"-ன்னாங்க.

அங்கேயே மேடையிலேயே, எங்க அம்மா அப்பாவ கூப்பிட்டு, இந்த மாதிரி நான் தாலி பத்தி சொன்னதயும் சொன்னாங்க.

ஆசிரியர் எங்க ஆத்தாகிட்ட "என்னம்மா சந்தோசமா!" ன்னு கேட்டாங்க.

எங்க ஆத்தாவும் மன நிறைவோட கை கூப்பி வணக்கம் சொல்லி, பொக்க வாயோட சிரிச்சாங்க.

நி
ற்

நாங்கள் லண்டன் வந்த பிறகு தாலிய உடனேயே  கழட்டிட்டோம். அந்த "தங்க தாலி செயின்" ஒரு ஓரமா தூங்கிகிட்டு இருந்தது. அந்த தாலியை ஏதாவது நல்ல செயலுக்கு உபயோகிக்கலாம்ன்னு காத்துகிட்டு இருந்தோம்.

அப்பதான் தொல்.திருமாவளவன் அவங்க ஒரு தடவ லண்டனுக்கு ஈழத் தமிழர் கருத்தரங்கத்துக்காக வந்திருந்தாங்க.

தொல்.திருமாவளவன் அவங்களோட சுயநலமில்லாத சமுதாய பணிய ஊக்குவிக்க ஏதாவது செய்யனும்ன்னு தோனிச்சு. திருமாவளவனின் 50 ஆம் ஆண்டு பொன்விழாவை ஒட்டி, எங்கள் வீட்டில் உறங்கிய தங்க தாலிய, அய்யா எழுச்சி தமிழர் திருமாவளவன்கிட்ட மனமுவந்து நன்றி உணர்ச்சியோடு கொடுத்திட்டோம்.

நி
ற்

எங்களுக்கு ஒரு மகன் பிறந்தார். அவர் பிறந்த நேரம் என்னை தவிர வேறு யாருக்கும் தெரியாது. வாழ்விணையரோ மகன் பிறந்த நேரத்தை பற்றி கேட்டதே இல்லை! ஆகையால ஜாதகம்ங்கிற மூட நம்பிக்கையிலேந்தும் வெளிய வந்து லண்டனில் மகிழ்ச்சியாக வாழ்கிறோம். லண்டன் முருகன் கோயில் பக்கத்தில கூட வாடகை வீட்டில் குடி இருந்திருக்கோம். இதுவரை ஒரு தடவை கூட எங்கள் சுயமரியாதையை பறிக்கும் லண்டன் முருகன் கோவிலுக்கு போனது கூட இல்லை. ஏன்னா எங்களுக்கு கடவுள் நம்பிக்கையும் இல்லை.

நி
ற்

தமிழர்கள் நாம பெரும்பாலும் நம்ம குழந்தைக்கு தமிழில் பேர் வைக்காம 'சமஸ்கிருதத்தில்' பேர் வெச்சிட்டு, ஆனாலும் நாம தமிழர்ன்னு சொல்றது மாதிரி ரெட்டை நிலை ஏமாத்து வேலையோட நடந்துக் கூடாதுன்னு, எங்கள் மகனுக்கு தமிழின் முதல் உயிர் எழுத்தான 'அ' வை பெருமை படுத்தும் வகையில் 'அகரன்' அப்படின்னு வெச்சோம்.


நி
ற்

சுயமரியாதை திருமணம்ங்கிறது அடிப்படையில் 'சுயமரியாதையை' மீட்டெடுப்பது. அதாவது அய்யர் எனும் பார்ப்பனரை வச்சி செய்யற வேத சமஸ்கிருத புரோகித மறுப்பு திருமணம். தாலி அணியக்கூடாதுங்கறது சிறப்பானதுன்னாலும், ஒரு படி ஏறினாதான அடுத்த படி ஏற முடியும் ? எட்டாவது பாஸ் பன்னினாதானே பத்தாவது பாஸ் பன்ன முடியும் ? இல்ல நா நேரடியா டிகிரிதான் முடிப்பேன்னு 'பெட்ருமாக்ஸ் லைட்டேதான் வேனும்'ன்னு உட்காரதான் முடியுமா !

இது ஒரு evolutionary process !

மகிழ்ச்சியா !

வாழ்க பெரியார்

வளர்க பகுத்தறிவு !

உண்மையுடன்
ஹரிஷ் கமுகக்குடி மாரிமுத்து


நோக்கம் !

- எண்ணங்களை எழுதுவது

- நயம்பட நகைச்சுவையாய் எழுதுவது

- எளிதினும் எளிதாய் எழுதுவது

பொன்னியின் செல்வன்

My photo
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
பெரியார் கொள்கை பற்றாளன் | தமிழன் | திராவிடன் | பகுத்தறிவாளன் | நாத்திகன் | பூர்வீகம் : திருவாரூரில், கமுகக்குடி எனும் அழகிய ஆற்றோர கிராமம்.

மெயிலில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

நறுமனம்

பிற தோட்டம்