Showing posts with label மதம். Show all posts
Showing posts with label மதம். Show all posts

வர்ணாசிரமம் - மலர் வாசனையா ?

வர்ணாசிரமம் - மலர் வாசனையா ?



'இந்து மதத்ததில் சாதி கிடையாது' என்று நம்பும் நவீன நாயகர்களே....


'சாதி என்பது, நம் மக்களுடைய கற்பனை; இந்து மதத்தில் சாதி என்பது குறிப்பிடப்பெற வில்லை' என்று கண்ணை மூடிக்கொண்டு கட்டியம் கூறுவோரே...

'இந்து மதத்தில், வர்ணாசிரம தருமம் என்று எதுவுமே இல்லை' என்று கட்டவிழ்த்து விடும்  காளையரே.....

'இந்து மதத்தில் உள்ள வர்ணாசிரம தருமத்தை, நம் மக்கள்தான் தவறாகப் புரிந்திருகிறார்கள்' எனும் பெருந்தனக் காரர்களே....

'இந்து மதத்தில் உள்ள வர்ணாசிரம தருமம் என்பது, மக்களின் மேன்மைக்காக உண்டாகபட்டது' என்று உளரும் சிறு உள்ளதோரே....
***********
'இந்து மதத்ததில் சாதி கிடையாது' - அப்படியா?  நம்புவோமாக !?!

'சாதி என்பது, நம் மக்களுடைய கற்பனை; இந்து மதத்தில் சாதி என்பது குறிப்பிடப்பெற வில்லை' -  அப்படியா?  நம்புவோமாக !?!

'இந்து மதத்தில், வர்ணாசிரம தருமம் என்று எதுவுமே இல்லை' -  அப்படியா?  நம்புவோமாக !?!

'இந்து மதத்தில் உள்ள வர்ணாசிரம தருமத்தை, நம் மக்கள்தான் தவறாகப் புரிந்திருகிறார்கள்' - அப்படியா?  நம்புவோமாக !?!

'இந்து மதத்தில் உள்ள வர்ணாசிரம தருமம் என்பது, மக்களின் மேன்மைக்காக உண்டாகபட்டது' - அப்படியா?  நம்புவோமாக !?!
***********
எவ்வளவோ நம்புறோம் இத நம்ப மாட்டோமா என்கிறீர்களா? நிற்க!

நாம் கூறுவதையாவது நம்பாதீர்கள்.

ஏன் என்றால்? நீங்களே கூட உங்களுக்கு வாய்ப்பு இருக்கும்போது, இங்கே கூறப்போவது நேர்மையாக
இருக்கிறதா என்று சரி பார்த்துக் கொள்ளுங்கள். பெரியார் அவர்கள், அவரின் கருத்துகளை யாரும் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துபவர்கள் இல்லை. 
மாறாக, பெரியார் அவர்கள், அவரின் கருத்துகளை பகுத்தறிந்து ஆராய்ந்து பார்க்க சொல்லுவார்கள். 

அப்படி பகுத்தறிந்து ஆராய்ந்து தான் இந்தக் கட்டுரையை எழுதத் திட்டமிடப்பட்டுள்ளது. இதைத் தொடங்குவதற்கு முன்னர் சில கேள்விகள் கேட்டு, அந்த கேள்விகளுக்கு முடிவில் விடை கிடைகிறதா என்று சரி பார்த்துக் கொள்ளலாம். 

கேள்விகள் இதோ:
- இந்து மதத்தின் சாரம் எவை ?
- வர்ணாசிரமத்தின் விளக்கம் எதிலே இருக்கிறது ?
- வர்ணாசிரமம் என்றால் என்ன ?
- வர்ணசிரமத்தினால் பயன் அடைவோர் யார் ?
- வர்ணசிரமத்தினால்,  இழப்பையும் இழிவையும் அடைவோர் யார் ?
- வர்ணாசிரமம் மனிதர்களுக்குத் தேவையா ?
- இந்து மதம்  மனிதர்களுக்குத் தேவையா ?
- மனிதர்களுக்கு  மதம் தேவையா ?

இந்து மதத்தில், இந்து மதத்தை விளக்க ஆதாரமாக இருப்பவையாகக் கூறப்படுவது:
  • வேதம்
  • மனு தர்மம் 
  • உபநிஷதம்
  • புராணம்
  • காவியம்
  • வேதாந்தம்
இன்னும் இத்யாதி இத்யாதிகள் இருக்கும்....

'இந்து மதத்தின் சாரமான வர்ணாசிரமத்தை, மொழி பெயர்க்கையில்  நம் மக்கள்தான் மனுதர்மத்தை திரித்து எழுதி விட்டார்கள்' - என்று நம்பிக்கொண்டு இருப்போர்களே;  உங்களுக்கே உங்களுக்காகதான் 'George Buhler' என்ற வெளிநாட்டு(ஜெர்மன்) அறிஞர் சமஸ்கிருதத்தில் இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த மனுதர்மத்தை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு இந்த கட்டுரையைத் தொடர்கிறோம். 

மொழி பெயர்ப்பாளர் : ஜெர்மனிகாரர்
மொழி பெயர்த்தது : சமஸ்கிருதத்தில் இருந்து ஆங்கிலத்தில்
மொழி பெயர்த்த வருடம் : 1886
மொழி பெயர்ப்பாளர் இறந்த வருடம் : 1898
தந்தை பெரியார் பிறந்த வருடம் : 1879

அது சரி, தந்தை பெரியார் பிறந்த வருடத்தை ஏன் இங்கே குறிப்பிடுகிறோம் என்று வியப்படையத் தேவை இல்லை; எங்கே இருந்து யார் வருவார் என்றே தெரியாது, என்ன சொல்வார் என்றே தெரியாது. '



பெரியார் சொல்லித்தான் George Buhler அப்படி மொழி பெயர்த்தார்' என்று தேவை இல்லாத விதண்டா வாதம் வைத்தாலும் வைத்து விடுவார்களோ என்ற முன்னெச்சரிக்கை தான்  :) 

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார  நிருவனத்தில், மனுநீதி பற்றி தமிழர் தலைவர் அவர்கள் 'அசல் மனுதரும சாஸ்திரம்' என்ற அராய்ச்சி புத்தகம் எழுதி வெளியிட்டிருக்கிறார்கள். அதை  வாங்கி வாசிக்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும், தற்போது தமிழகத்தில் இல்லாததால்(வெளிநாட்டில் [லண்டனில்] இருப்பதால்),  மனு நீதி பற்றிய  திராவிடர் கழக வெளியீடுகளை வாசிக்காமலே, இந்த முயற்சியில் இறங்கி இருப்பதால், ஒரு வகையில் இந்தக் கட்டுரையின் நோக்கதிற்கு ஒரு தேக்கம் தான். ஆனாலும், தந்தை பெரியார் காட்டிய ஆராய்ச்சிப் பாதையில், சிறிதேனும் முயற்சி செய்து ஆங்கில மொழி பெயர்ப்பையே ஆதாரமாகக் கொண்டுதான் இந்த கட்டுரையை எழுதத் திட்டமிடப்பட்டுள்ளது.




இந்து மதத்தின் மனு தர்மத்தைப் புரிந்து கொள்வதற்கு, கீழ்க் கண்ட தகுதிகள் இருந்தாலே போதும்.








- தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் :)


- ஆங்கிலப் புலமை இல்லாவிடினும், ஆங்கிலத்தில் வாசிக்க மற்றும் புரிந்து கொள்ளக் கூடிய திறமை
- கற்பனையான இழிவு நிலையில் இருந்து மீள வேண்டும் என்ற எண்ணம்

அதிலும், இந்த ஆங்கில மொழி பெயர்ப்புக்கான சுட்டியும் இங்கே கொடுக்கப்படும்.மனு தர்மம் முழுமையையும் மொழி பெயர்ப்பது அல்ல, இந்த கட்டுரையின் நோக்கம். மாறாக, மனிதர்களை இழிவு படுத்தும், பிரிவு படுத்தும், ஒரு சாரார் மட்டும் ஆதிக்கம் செலுத்தும் ஓரவஞ்சனைப் பற்றிய, மற்றும் பகுத்தறிவுக்கு ஏற்க முடியாத அளவிற்கு உள்ள ஸ்லோகங்களை மட்டுமே இங்கே குறிப்பிடப் படும்.

'இப்படிக் கூறுகிறீரே, மனு தர்மத்தில் ஒன்றிரண்டு நல்ல செய்திகளும் இருக்குமே; அதை எல்லாம் ஏன் கூறவில்லை' என்று சண்டை சச்சரவு செய்யாதீர்கள். அப்படி நல்ல செய்திகள் இருந்தால், அதை தாங்கள் எழுதுங்கள்; அதை வாசிக்க ஆர்வமாய் இருக்கிறோம். 

நாம் என்ன கூறுகிறோம் என்றால், 'இழிவில் போய் மலர் வாசனை தேடலாமா' என்றுதான் கூறுகிறோம்.

தொடரும்....

உண்மையுடன்
பொன்னியின் செல்வன்

கணக்கு !!! !+!-!x!-! !!!



இது வெண்டைக்காய் விவகாரம்.

'மதம்' பெரிதா? 'மனிதம்' பெரிதா? என்று கணித முறையில் ஆராய்ந்தால், 'மனிதம்' தான் சிறந்தது எனத் தெரியவரும்.
வார்த்தை ஒன்று : {ம, த, ம் }
வார்த்தை இரண்டு : {ம, னி, த, ம் }
எண்  கணித முறையில் உள்ள செட் (Set), சப் செட் (Sub set) மற்றும் சூப்பர் செட் (Super Set) வழி பார்த்தோமேயானால், 'மனிதம்' என்ற வார்த்தையில், {ம, த, ம்} என்று, மதத்தின் அணைத்து எழுத்துக்களும் உள்ளன. அப்படி பார்க்கையில், 'மனிதம்' சூப்பர் செட்(Super set), 'மதம்' சப் செட்(Sub set).
ஆகா 'மனிதம்' தான் சிறந்தது. கணிதம் வாழ்க !!!

உலக தொழில் நுட்ப வளர்ச்சிக்கு அடிப்படையான, எண் கணித வளர்ச்சிக்கான பணிகளில், இந்தியாவின் பங்களிப்பு ஏதேனும் உண்டென்றால்; ஒன்றுமில்லை.
ஒன்றுமில்லை ?
ஆம்.... 'ஒன்றுமில்லை' ...
சற்றே பொறுப்போம்.
'ஒன்றுமில்லை' என்பதை, கணிதத்தின் படி கூற வேண்டும் என்றால், 'பூஜியம்' என்று தான் கூற வேண்டும்.
ஆக, இந்த 'ஒன்றுமில்லை' எனப்பட்ட 'பூஜியத்தை' உலகுக்கு தாரை வார்த்தது நமது இந்திய தேசம் தான்.

அதிலும் இன்றைய தகவல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சிக்கு அடிப்படையாய் இருக்கும் இரண்டு எண்களாக கருதப்படுவது.
பூஜியம் (0); மற்றும் ஒன்று (1).
இந்த இரண்டு எண்களும் தான் தகவல் தொழில் நுட்பத்தின் இரு கண்கள்.
இவற்றை இன்னும் பல விதங்களில் கூறுவது உண்டு. அவையாவன,
ஆன் (ON) - ஆஃப் (OFF)
எஸ் (YES) - நோ (NO)
ட்ரூ (TRUE) - ஃபால்ஸ் (FALSE)
இதையே தமிழில் மொழி பெயர்க்கலாம் என்று மண்டையை பிய்த்துக்கொள்ளாமல் தோன்றுவது,
வ்வரும் ம்ம்ம்ம்ம்ம்ம்ம் - ஆனா வ்வராது .....

இந்த 'பூஜியம்' என்பது இல்லாது இருந்திருந்தால் என்ன ஆகி இருக்கும் என்று யோசித்துப் பார்த்தால், பல வேடிக்கைகள் நடக்கலாம். உதாரணத்திற்கு நாம் வாங்கும் சம்பளத்தில் பூஜியத்தை எடுத்து விட வேண்டியதுதான்.
அதாவது ரூபாய் 3500 என்று இருந்தால், ரூபாய் 35 ஆகி விடும். இவை எல்லாம் நம்மை போன்ற சாமானிய பட்டவர்களுக்குத் தான் இப்படிப்பட்ட கவலை. அதுவே தமிழக முதல்வராய் இருந்து, 1 ரூபாய் மட்டும் சம்பளம் வாங்குபவர்களுக்கு இந்த கவலை வந்து விடாது, ஏனென்றால் வாங்கும் சம்பளத்தில் தான் பூஜியம் இலையே. அதிலும் 9 ராசி எண்ணாக அமைந்து விட்டால், ஒரே குஷி தான்.

நம் குழந்தைகள், நிஜத்தில் புத்திசாலிகள் தான். நாம் தான் அவர்களை மனனம் செய்ய வைத்து, நியூரான்களை நசித்து விடுகின்றோம்.

ஒரு பொறியியல் மாணவனிடமும், ஒரு சிறு குழந்தையிடமும் ஒரே கணக்கு கேள்வி கேட்கப் படுகின்றது.
மொத்தம் மூன்று மூன்றுகளை உபயோகிக்கலாம். அதாவது 3, 3, 3.
என்ன வேண்டுமானாலும் செய்யலாம், ஆனால் விடை 24 வர வேண்டும் என கேட்கப்படுகின்றது.
இதற்கு பொறியியல் மாணவன், கீழ் கண்டவாறாக விடை அளித்தான்.
= 3, 3, 3
= (3^3) - 3
= 27 - 3
= 24
விடை சரியான விடைதான்.
அதே கேள்விக்கு சிறு குழந்தை கீழ் கண்டவாறாக விடை அளித்தான். ஆனால் விடை கொண்டு வந்த விதம் தான் வேடிக்கை.
முதல் மூன்றை (3) திருப்பி இரண்டாம் மூன்றோடு (3) ஓட்டினான். இப்போது கையில் இருப்பது (8).
இப்போது இந்த எட்டை மீதம் இருந்த மூன்றோடு பெருக்கி விட்டான்,
= 3, 3, 3
= 8, 3
= 8 x 3
= 24
கெட்டிகார பிள்ளைகள்...

கணக்கில் சிறந்தவர்களை, 'கணக்குல புலி' என்கிறோம். புலி என்னைக்கு கணக்கு படித்தது ? என்று எண்ணி பார்த்தால் குழப்பம் தான் மிஞ்சுகின்றது.
ஒரு வேளை இப்படியும் இருக்குமோ ? ...
ஒரு வேளை அப்படியும் இருக்குமோ ? ......
புலியின் ஓடும் வேகத்திற்கு, ஈடான வேகத்தில் கணக்கு போடுபவரைத்தான் இப்படி 'கணக்குல புலி' என்று சொல்லுகின்றார்கள் போலும் ?
அப்படிப் பார்த்தால், நாமெல்லாம் 'கணக்குல மான்' ; கேள்வி கேட்டவுடனேயே பதுங்கி விடுவோம். பிறகு இரண்டு கால் பாய்ச்சலில் ஓடியும் விடுவோம்.

கல்லூரியில், கணக்கு வாத்தியார் வகுப்பு முடிந்து வகுப்பறையை விட்டு வெளியே சென்றவுடன், என்ன தாலாட்டு சத்தத்தையே காணோம், என்று தூக்கம் களைந்து எழுந்து பார்த்தால்; கரும் பலகையில், நாள் பட்ட கொத்து பரோட்டாவை பிச்சு போட்ட மாதிரி கிறுக்கி இருக்கும். முதல் பெஞ்ச் நண்பனிடம்  போய், 'இது என்னடா?' என்று விசாரித்தால், 'மாட்ரிக்ஸ்'(Matrix) என்பான். நாமோ புரியாதவனாய், 'ஃபஸ்ட் பார்ட்டா ? செகண்ட் பார்ட்டா ?' என்போம்.
இப்படி, பல நாள் முதல் பெஞ்ச் விசாரிப்பில் வெளிப்படுவன, லக்ராஞ்சே (Lagrange), ஃபோரியர் (Fourier), ஆயிலர் (Euler) எனப்படுவன.

இந்த கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் இதெல்லாம் சொல்லித் தர மாதிரியான கல்லூரி எங்காவது கண்டால் சொல்லி அனுப்பவும்.

இவையன்றி கணக்கு பரீட்சை முடிந்தவுடன் தேர்வு அறைக்கு பக்கத்தில் உள்ள குப்பைத் தொட்டியில் பல துணுக்கு சீட்டுகள் கிடைக்கலாம். இப்போதெல்லாம் கையெழுத்து பிரதியுள்ள புத்தகங்களுக்கு பெருத்த மதிப்பிருக்கின்றது. இந்த குப்பைத்  தொட்டியைக் கிளறினால் , பல கையெழுத்துகள் அடங்கிய ஒரு முழு இன்ஜினியரிங் மேதமேடிக்ஸ் புத்தகம் கிடைக்கலாம்.

பதிப்பாளர்களுக்கு ஒரு வேண்டுக்கோள், தலையனை அளவு உள்ள புத்தகங்களுக்கு பதில், கைக்கு அடக்கமான வடிவில், எடை குறைவான அளவில் வெளியிட்டால் உங்கள் புத்தகங்களுக்கு சந்தையில் நல்ல மதிப்பு இருக்கும். மாணவர்களும் ஆர்வத்துடன் வாங்குவார்கள். புத்தக சுமை குறையுமே என்ற ஒரே (!!!) ஆர்வத்தில் தான் இதைக் கேட்கின்றோம்.

அன்று, காந்திஜி இந்திய மக்களை ஒன்று திரட்டி, ஒன்றுபட்டு பாடுபட்டு இந்திய விடுதலை வாங்கித்தந்தார்.
இன்று, கலாம் இந்திய இளைஞர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி, வளர்ந்த இந்தியாவை அடைய பாடுபடுகின்றார்.
இது 'இன்டெக்ரல் கால்குலஸ்' (Integral Calculus) கணக்கு.

மாறாக, ஏழு அமைச்சரையும் அழுது வடிந்து தான் கொடுத்தார்கள் என்பதாலும், தன் மத்திய அமைச்சர் மகனுக்கு இந்தி மற்றும் ஆங்கிலம் பேச தெரியாது என்பதால், குடும்பம் சிறுமை படுத்தப்பட்டு விடக்கூடாது என்பதற்காக, மீண்டும் ஆரிய திராவிடர் பிரிவினையை தூண்டி விட முயற்சி செய்யலாம்,சில தமிழ் தலைவர்கள்.
இது 'டிஃபெரென்ஷியல் கால்குலஸ்' (Differential Calculus) கணக்கு.


குழந்தைகளுக்கு கணக்கு சொல்லி தரும் போது சற்று கவனமாக இருக்க வேண்டும்.
ஒரு அப்பா அவர் சிறு குழந்தைக்கு கணக்கு சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார்.
அப்பா கூறுகின்றார், 'ஒன்னும் ஒன்னும், ரெண்டு '.
குழந்தை, 'போப்பா, நீ பொய் சொல்லுற... அன்னிக்கு என் தலைய தடவி விட்டுக்கிட்டே, அம்மாகிட்ட ஒன்னும் ஒன்னும் மூணு -ன்னு சொன்ன',
அப்பா சிரித்துக்கொண்டே, 'டேய், அது வேற கணக்குடா'
குழந்தை, 'அப்போ அத மொதல்ல சொல்லிக்கொடு' !!!!!
இது குழந்தை கணக்கு !

கட்சி படு தோல்வி அடைந்து விட்டதால், எதிர் கட்சி தலைவராய் அமர மாட்டேன் என்று கூறுவது.
எம்.பி. எண்ணிக்கை குறைந்து விட்டதால், கொட நாட்டில் இருந்து அடுத்த காய் நகர்த்தலாம் என்று எண்ணுவதும்.
ஐந்தாண்டுக்கு ஒரு முறை கூட்டணி தாவினால் பலம் பெருகும், என்று எண்ணி ஏமாறுவது.
இவை எல்லாம் அரசியல் கணக்கு !


சில சமயங்களில் சிங்கிள் டீ குடிக்க கூட காசு இருக்காது. மாச கடைசியாக வேற இருக்கும்.
வேறு வழியே இல்லாமல், நண்பருடன் நாயர் கடைக்கு சாயா குடிக்க சென்றால்,
'சேட்டா, ரெண்டு டீ.. ஸ்ட்ராங்கா......... '
'என்ட  மோனே, ஸ்ட்ராங்காயிட்டு வேணுமோ ? ............ போன மாச பாக்கியே இன்னும் கொடுத்திட்டு இல்லியே ..... '
'சேட்டா, இன்னும் ஒரு வாரம்தான் , சம்பளம் வந்து விடும் , கவலையே படாதீங்க'
டீ குடித்த பின், மீண்டும் அடுத்த மாச கடைசியில் தான் நாயர் கடைக்கு விஜயம் செய்வோம்.
இது காந்தி கணக்கு !!

ஹரீஷ்

நோக்கம் !

- எண்ணங்களை எழுதுவது

- நயம்பட நகைச்சுவையாய் எழுதுவது

- எளிதினும் எளிதாய் எழுதுவது

பொன்னியின் செல்வன்

My photo
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
பெரியார் கொள்கை பற்றாளன் | தமிழன் | திராவிடன் | பகுத்தறிவாளன் | நாத்திகன் | பூர்வீகம் : திருவாரூரில், கமுகக்குடி எனும் அழகிய ஆற்றோர கிராமம்.

மெயிலில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

நறுமனம்

பிற தோட்டம்