இந்து மதத்தின் மீது நமக்கு என்ன தனிப்பட்ட வெருப்பா? இல்லை.
பின் ஏன் கானும் இந்து மதத்தைப் பற்றிய உண்மைகளை விளக்குகிறீர்? என்றால். இந்து மதத்தில், மறைக்கப்பட்ட மறுக்கப்பட்ட பல மனிதஉரிமை மீறல்கள் உள்ளதால்தான். இந்தக் கணத்தில், இதை உங்களால் வாசிக்க முடிகிறது என்றால், அது இந்து மதத்தினால் விளைந்தது இல்லை. இதை வாசித்து இந்த வார்த்தையை உங்களால் சிந்திக்க முடிகிறது என்றால், அதுவும் இந்து மதத்தினால் வந்த விளைவு இல்லை.
தந்தை பெரியாரால் வந்தது; கர்ம வீரர் காமராசரால் வந்தது; 'நன்றி மறப்பது நன்றன்று'.
மேலான்மையில், 5 WHY principle என்ற ஒன்று இருக்கிறது. அதாவது, ஒரு தவறின் மூலக்காரணம் அறிய வேண்டுமென்றால், 'ஏன்? ஏன்? ஏன்? ஏன்? ஏன்?' என்று ஐந்து முறை, தவறிலிருந்து கேட்டு கொண்டே போனால், முடிவில் மூலக்காரணம் அறிய முடியும்.
இந்த 5 WHY principle-ஐ கல்வியில் செலுத்தி பார்ப்போமேயானால்;
- உங்கள் பெற்றோர் கல்வி கற்கும் வாய்ப்பு அமையப் பெற்றனரா?
- இல்லை என்றால், ஏன்?
- பள்ளிக்கூடம் இல்லை. ஏன் பள்ளிக்கூடம் இல்லை?
- கல்வி மறுக்கப்பட்டது. ஏன் கல்வி மறுக்கப்பட்டது?
- இந்து மதத்தின் சாரமான வர்ணாசிரம கொள்கைப் படி,
கற்பனையான முதல் சாதியினரைத் தவிர மற்றவருக்கு கல்வி மறுக்கப்பட்டது.
- உங்கள் பெற்றோர் கல்வி கற்கும் வாய்ப்பு அமையப் பெற்றனரா?
- உங்கள் பெற்றோர் கல்வி கற்கும் வாய்ப்பு அமையப் பெற்றனரா?
- ஆம். பெற்றோர் கல்வி கற்கும் வாய்ப்பு பெற்றார்கள்.
- அப்படியானால் உங்கள் மூதாதையர் படித்திருக்கிறார்களா?
- இல்லை என்றால், ஏன்?
- பள்ளிக்கூடம் இல்லை. ஏன்?
- கல்வி மறுக்கப்பட்டது. ஏன்?
- இந்து மதத்தின் சாரமான வர்ணாசிரம கொள்கைப் படி,
- இந்து மதத்தின் சாரமான வர்ணாசிரம கொள்கைப் படி,
கற்பனையான முதல் சாதியினரைத் தவிர மற்றவருக்கு கல்வி மறுக்கப்பட்டது.
- உங்கள் பெற்றோர் கல்வி கற்கும் வாய்ப்பு அமையப் பெற்றனரா?
- ஆம். பெற்றோர் கல்வி கற்கும் வாய்ப்பு பெற்றார்கள்.
- அப்படியானால் உங்கள் மூதாதையர் படித்திருக்கிறார்களா?
- ஆம். மூதாதையர் படித்திருக்கிறார்கள்.
- நீர் பார்ப்பணரா?
இது ஏதோ, பார்ப்பணரை துவேஷிக்கும் எண்ணத்தினால் கூறவில்லை. இங்கே கல்வி என்பது 'பொது'. ஆனாலும், காலம் காலமாக கல்வி ஒரு சாராருக்கு மட்டும் Reserve செய்ய்யப்பட்டதன் காரணம் என்ன? ஒரு சாரார் கற்பனையான உசத்தி; மற்றார் கற்பனையான கீழ், என்ற காரணத்தினால்தான்.
இந்து மதத்தின் சாரமான வர்ணாசிரம தர்மம், அப்படி என்னதான் சொல்லித் தொலைகிறது என்று பார்த்தால், பால்வீதி(Milky Way Galaxy) புழுகு தாண்டி, அண்டசராசர(Universe) புழுகு புழுகுகிறது!
இப்பூவுலகில் பிறக்கும் மனிதர்கள் நால்வகைப் படுவராம்! குணத்தால், உழைப்பால், திறமையால், அறிவால், ஆற்றலால அல்லாமல்; Advance Booking எனும் விதமாக -
இப்பூவுலகில் பிறக்கும் மனிதர்கள் நால்வகைப் படுவராம்! குணத்தால், உழைப்பால், திறமையால், அறிவால், ஆற்றலால அல்லாமல்; Advance Booking எனும் விதமாக -
பிரம்மா எனும் கற்பனைக் கதாபாத்திரத்தின்
முகத்தில் பிறந்தவர்களாகக் கருதப்படுபவர்கள் - முதலாம் சாதியாம்!
தோளில் பிறந்தவர்களாகக் கருதப்படுபவர்கள் - இரண்டாம் சாதியாம்!
தொடையில் பிறந்தவர்களாகக் கருதப்படுபவர்கள் - மூன்றாம் சாதியாம்!
காலில் பிறந்தவர்களாகக் கருதப்படுபவர்கள் - நான்காம் சாதியாம்!
அட பாருப்பா! இந்த பிரம்மா என்ற கற்பனை கதாபாத்திருத்துக்குள்ளே ஏதோ ஒளிஞ்சிருக்கு என்று ஆச்சரியப்படும் விதமாக, பிரம்மா என்ற கற்பனை கதாபாத்திரம் எங்கிருந்து பிறந்தாராம்? என்று வர்ணாசிரமம் கூறவில்லை. நமக்கேன் இந்த வீண் சிரமம் என்று விட்டு விட்டது போலும்!
பிரம்மா என்ற கற்பனை கதாபாத்திரம், ஆண் என்று கொண்டால், அந்த கற்பனை ஆண்தான் பிள்ளைப் பெறுகிறார் என்றால், இதனை Ripley's Believer it or Not-ல் வேண்டுமானால் பதிவு செய்யலாம் ( Ripley's Believer it or Not! ). இல்லை என்றால், இந்த Medical Miracle-ஐ WHO-வில் பதிவு செய்யலாம்.
'WHO' என்றால் 'யார்' என்ற அர்த்ததில் கூறவில்லை.
'WHO' என்றால் உலக சுகாதார நிறுவனமான World Health Organization ( WHO ).
அறிவியல் பூர்வமாக, குழந்தைகள் எப்படி பிறக்கிறார்கள் என்று கண்ணியமான முறையில், கீழே உள்ள கானொளியில் காணலாம்.
அது சரி, கற்பனை கதாபாத்திரமான பிரம்மாதான் இப்படி, Top to Bottom - tiredless self delivery செய்வதாகக் கூறி பீற்றுகிறார் என்றால்,
அங்கே தூரத்தில் இருந்து ஒருவர், 'நண்பேண்டா..............' என்று கூறிக் கொண்டு ஓடி வருகிறார். வேறு யார்? அடுத்த கற்பனை கதாபாத்திரமான 'கிருஷ்ணன்' தான்.
பகவத் கீதை எனும் கற்பனை பு(ருடா)ரானத்தில், கிருஷ்னன் எனும் கற்பனை கதாபாத்திரமோ, தான்தான் இந்த நான்கு வர்ணங்களையும் படைத்ததாக Patent கேட்கிறார் போலும்! கீதையில் கூறப்பட்டுள்ளது கற்பனை கதாபாத்திரமான கிருஷ்னன் கூறுவதாக, 'சதுர் வர்ணயம் மயா ஸ்ருஷ்டம்' (பகவத் கீதை அத்தியாயம்-4, சுலோகம்-13) என்று ஜம்சுகிரதத்தில் கூறப்பெற்றுள்ளது.
இப்படியாக வர்ணாசிரம தர்மத்தை படைத்ததாகக், கூறப்படும் கற்பனை கதாபாத்திரங்களான பிரம்மாவாலும் கிருஷ்னனாலும்தான் நம்மில் பலருக்கும் கல்வி மறுக்கப்பட்ட நிலை இருந்ததென்றால் அது மிகையில்லை. அதுதான் உண்மை! இப்படிப்பட்ட இழிந்த தீயவற்றை உடைய இந்துமத இழிவை; 'நன்றல்லது அன்றே மறப்பது நன்று' என்றும், 'மனிதர்களாய் பிறந்த அனைவரும் சமமே!' என்றும் கூறி - மறுத்து ஒதுக்குதல் ஷேமங்கானும்!
உண்மையுடன்
பொன்னியின் செல்வன்