எந்திரன் பன்ச் டயலாக் !!

இவ்வளவு நாட்கள் ஆகிறது எந்திரன் படப்பிடிப்பு தொடங்கி. எந்திரன் பன்ச் டயலாக் இன்னும் இனையத்தில் உலா வரவில்லை என்ற சிறு ஏக்கத்தின் காரணமாக தொடங்கப் படும் சில “பன்ச் டயலாக்” வரிகள்.

இதோ உங்கள் பார்வைக்கு, அந்த கற்பனைகள்.

*********************************************************************************

ஹே ஹே ஹே….. ஹே…
எந்திரா,
உனக்குள்ள இருக்கிறது வெறும் பிராஸசர் (Processor)
இந்த மந்திரன்,
எனக்குள்ள இருக்கிறது பெரும் ராட்சஸன்
ஹாங் … ஹாங் … ஹாங் !!

*********************************************************************************

உனக்குள்ள வெறும் புரோகிராம் (Program)
இந்த உலகத்துக்கே தெரியும்
என் பராக்கிரமம் !

*********************************************************************************

ஹே எந்திரா, உங்கிட்ட இருக்கு ரேம் (RAM)
ஆனா என் கிட்ட இருக்கிறது
ராம் !! … ஸ்ரீ ராம் !!!! ஜெய் ஸ்ரீ ராம் !!!!

ரேம் (RAM) கொஞ்ச நேரந்தான்
ராம் எல்லா நேரமும் !!
தெரிஞ்சுக்க புரிஞ்சிக்க பேசாதே !!!

*********************************************************************************

உனக்குள்ள இருக்கிறது எலெக்ட்ரிக் மோட்டார் (Motor)
நான் எகிறி அடிச்சா நீன் டார் டார் ……. !!!!

*********************************************************************************

(எந்திரனிடம்)
கண்ணா என்னை ஆக்கியது அவன் (கை விரலை வானம்
நோக்கி காட்டி).

ஆனா உன்னை ஆக்கியது இவன் (கை விரலை தன்
நெஞ்சை நோக்கி காட்டி).

என்னை அழிக்க அவனாலதான் முடியும் (மீண்டும் கை விரலை
வானம் நோக்கி காட்டி).

உன்னால முடியாது ! (கை விரலை எந்திரன் நோக்கி காட்டி)

*********************************************************************************

கண்ணா,
உணர்ச்சி உனக்குள்ள பதிஞ்சிதான் இருக்கு
ஆனா
அதுவே எனக்குள்ள புதைஞ்சிருக்கு !!!

*********************************************************************************

நீ வாழ தேவை
ஒன்னும்(1) பூஜ்ஜியமும்(0) தான்.

ஆனா நான் வாழ தேவை
இந்த மண்ணும் மக்களும் தான் !!!

*********************************************************************************

எந்திரா……
நீ மக்கர் பன்னினாலும்,

அத டக்கர் பன்ன
இந்த மந்திரன் தான் வேனும் !!!

*********************************************************************************

உனக்கு தெரிஞ்சது வெரும்
சேவ் ப்ரோகிராம் ( Save Program)

ஆனா
இந்த அருனாச்சலத்துக்கு தெரிஞ்சது
சிவ புரானம் …

சிவன் Save-ஐயும் அழிச்சிடுவான் !!

*********************************************************************************

கண்ணா
உனக்கு கம்பைல்(compile) ஆகி ரன்(run) ஆனாதான் வாழ்க்கை

ஆனா
நமக்கு கம்பஞ்சோறும் ரவா கஞ்சியும் இருந்தாலே ஓடும் வாழ்க்கை !!

*********************************************************************************

என் மூளையில் செதுக்கிய
சாதாரன சிலை தான் நீ.

உன்னை செதுக்கின எனக்கு
சிதைக்கவும் தெரியும் !!

*********************************************************************************

நீயெல்லாம் எனக்கு ஜுஜூப்போ !!

பி.கு : தற்காலத்தின் ஜுஜூபி தான் ரோபோ காலத்தின் ஜுஜூப்போ

*********************************************************************************

கண்ணா
நீ பார்த்தா
அது பிஃஸெல் (pixel)

அதையே நான் பார்த்தா
அது மின்னல் !!

*********************************************************************************

ஹே
உனக்கு இதயம் இரும்பு
எனக்கு இதயம் கரும்பு !!

*********************************************************************************

நாங்க சோற திங்கிறவங்க
உன்னால சேற கூட திங்க முடியாது !!

*********************************************************************************

கண்ணா
நீ தப்பு செஞ்சா அது எர்ரர் (Error)
நான் தப்ப தட்டி கேட்டா அது டெர்ரர் !!

*********************************************************************************

எந்திரனில் இரண்டு ரஜினி என சொல்லிக் கொள்கிறார்கள்.
அதனால், நிஜ ரஜினி கிட்ட, எந்திரன் ரஜினியை பார்த்தவர்கள்
என்ன சொல்வார்கள் ?

உன்னைப் போல் ஒருவன்

*********************************************************************************

கண்ணா …
நீ ஒன்னுலயும் (1) பூஜியத்திலயும் (0) அடங்குற
சாதாரண இயந்திரம்.

நான்
பூஜியத்தில் ஆரம்பிச்சு ராஜியத்தில் முடியற மந்திரம் !!

*********************************************************************************

உங்களுக்கு தோன்றும் பன்ச் டையலாக்கு களையும்
எழுதி அனுப்பலாம்.

எந்திரனை எதிர் நோக்கும்
அன்பன் ஷ்….
ஹரீஷ்

1 comments:

பாலாஜி சங்கர் 18 September 2010 at 16:09  

சிலவற்றை தவிர அனைத்தும் அருமை

Post a Comment

நோக்கம் !

- எண்ணங்களை எழுதுவது

- நயம்பட நகைச்சுவையாய் எழுதுவது

- எளிதினும் எளிதாய் எழுதுவது

பொன்னியின் செல்வன்

My photo
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
பெரியார் கொள்கை பற்றாளன் | தமிழன் | திராவிடன் | பகுத்தறிவாளன் | நாத்திகன் | பூர்வீகம் : திருவாரூரில், கமுகக்குடி எனும் அழகிய ஆற்றோர கிராமம்.

மெயிலில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

நறுமனம்

பிற தோட்டம்