கிருத்துருவ மருத்துவ கவுன்சில்'கிருத்துருவம்' என்றால்? 'வேண்டும் என்றே' - 'வீம்புக்கு என்றே' – 'சண்டை செய்ய என்றே' – 'வம்பு செய்ய என்றே', போன்ற அர்த்தங்களில் கொள்ளலாம்.

அதற்கு என்ன என்கிறீர்களா? நன்றாய் கேட்டீர் போங்கள்! இந்திய மருத்துவ கவுன்சில் மேற்கொள்ளப் போவதாய் கூறும் நடவடிக்கையைக் கேட்டால், 'கிருத்துருவமும் குறைவோ?' என்றே எண்ணக்கூடும்.

வரலாற்றுக் குறிப்பு : இந்தியா விடுதலை அடையும் முன்னர், தமிழகத்தில் மருத்துவப் படிப்பு சேருவதற்கு 'சமஸ்கிருதம்' கட்டாயமாக தெரிந்திருக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. இதன் உள்ளர்த்தம் என்னவெனில், பார்ப்பனர்  மட்டுமே மருத்துவர் ஆகலாம் என்பதே. 'தந்தை பெரியார்' ஆதரித்த நீதிக்கட்சியின் ஆட்சியில்தான், இந்த நிலை மாறியது. அதாவது, அனைவருமே மருத்துவர் ஆகலாம்; மொழி முக்கியம் இல்லை எனும் நிலை.

'கர்மவீரர் காமராசர்' ஒரு முறை கூறினார்கள்: 'எந்த தாழ்த்தபட்டவன் மருத்துவராயி ஊசி போட்டு, நோயாளி செத்தா-ங்கிறேன்; எந்த தாழ்த்தபட்டவன் இஞ்சினியராயி பாலம் கட்டி, பாலம் இடிஞ்சிச்சு-ங்கிறேன்!'

இந்தப் பதிவு, முன்னரே வெளியான 'கல்வியும் கேள்வியும்' (http://www.ponniyinselvan-katturai.blogspot.com/2010/03/blog-post.html) என்ற பதிவின் தொடர்ச்சிதான்.

ஏன் இவ்வளவு பீடிகை என்றால்? சமீபத்தில், நாடு தழுவிய அளவில் மருத்துவப் படிப்பு சேருவதற்கு பொது நுழைவுத் தேர்வு கொண்டு வரும் திட்டத்தை 'அகில இந்திய மருத்துவ கவுன்சில்' அறிவித்தது. அதுவும் மத்திய  சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அனுமதி பெறாமலே! மருத்துவ கவுன்சிலின் சட்டப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்ற பின்னர்தான், மருத்துவ கவுன்சில் திட்டத்தை அறிவிக்க வேண்டுமாம்.

இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம் – 1956, பகுதி 33, இவ்வாறாக இருக்கிறது:

33. POWER TO MAKE REGULATIONS
The Council may, with the previous sanction of the Central Government, make regulations generally to carry out the purposes of this Act, and without prejudice to the generality of this power, such regulations may provide for:- 
1) ......
...........
...........
12) The conduct of professional examination; qualifications of examiners and the conditions
   of admissions to such examinations;
...........
...........
14) ....

இந்த பொது நுழைவுத் தேர்வை கைவிடக்கோரி தமிழகத்தில்திராவிடர் கழகம் பிரச்சாரம் மற்றும் போராட்டம் செய்தது-செய்கிறது-செய்யும். தமிழக அரசும், பொது நுழைவுத்தேர்வை கைவிடக்கோரி நீதிமன்றதில் முறையிட்டது. பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்கள் எதிர்ப்புக் குரலை எழுப்பின.

திராவிடர் கழகம், 'சமூக நீதி காத்திட' பிரச்சாரமும் போராட்டமும் செய்து கொண்டிருப்பதை, எந்த பார்ப்பன பத்திரிகையிலாவது நுனி மூக்களவாவது வந்திருந்தால் தெரியப்படுத்துங்கள்! எந்த பார்ப்பன பத்திரிகையையும் பார்க்காமலேயே கூறமுடியும், 'அவாள்' செய்தி வெளியிட்டிருக்க மாட்டார்கள் என்று. ஏன் என்றால்? சமூக நீதி என்றாலே 'அவாளுக்கு' கசக்கும். வேண்டுமானால் அரசியல்வாதிகளின் அறிக்கைகளை வெளியிட்டிருக்கக் கூடும்; அதுவும் 'நடுநிலை(!)' என்பது போல் பாவ்லா காட்டிக் கொள்வதற்காக இருக்கக் கூடும். சற்றே சிந்தியுங்கள் தோழர்களே!

தற்போது, இந்தியா முழுவதிலும் இருந்து பல எதிர்ப்புக் குரல்கள் வந்தபிறகுதான் மத்திய அரசும், 'மருத்துவ படிப்புக்கு நாடு தழுவிய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடைபெறும் என்ற அறிவிப்பை உடனடியாக வாபஸ் பெறுமாறு' அகில இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு உத்தரவிட்டுள்ளது.

மகிழ்ச்சி,

மகிழ்ச்சி நீடித்தால் மிக்க மகிழ்ச்சி.

ஏன் கூறுகிறோம்? என்றால், இந்த 'பொது நுழைவுத் தேர்வு' அலை ஓய்வதாக இல்லை. ஏன்? என்றால், இம்மாதம் 11ஆம் தேதியிலிருந்து 13ஆம் தேதிவரை மற்றொரு ஆலோசனைக் கூட்டம் நடைபெறப் போகிறதாம்; கபில் சிபல் அவர்கள் தலைமையில். என்னது? மறுபடியும் முதலில் இருந்தா? ஸ்... அப்பா... முடியல!

அந்த கூட்டத்தின் முடிவு வெளியாகும் வரை பதை பதைப்புதான்.

ஏன்? என்றால், இதே கபில் சிபல் தலைமையிலான கல்வி அமைசகம்தான் சென்ற வருடம், அகில இந்திய அளவிலான பொறியியல் நுழைவுத் தேர்வை அறிவித்தது. பதை பதைப்பின் காரணம் புரிகிறதா இப்போது!

இந்து மதத்தின் வர்ணாசிரம தத்துவத்தின் படி, நாலாம் சாதி, ஐந்தாம் சாதி என்று சமூகத்தில் பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் என்று வரையறுக்கப்பட்ட மாணவர்களுக்கு, 'பொது நுழைவுத் தேர்வு' என்பது, வளர்ச்சியுற மிகப்பெரிய இடையூறாக இருக்கும்.'சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை மட்டும் கொடுக்காதே' என்று இந்து மதத்தின் மனுநீதி கூறுகிறது.

'தந்தை பெரியார்' என்ற சமூக விஞ்ஞானியால்தான் இந்து மதத்தின் அபத்தங்கள் வெளிக்கொணரப்பட்டு பகுத்தறிவு பரவலாக்கப்பட்டு, நம் மக்கள் 'நல்லபடியாக படித்து' முன்னேற முடிந்தது-முடிகிறது-முடியும்.

தமிழ்நாட்டில் 2010ஆம் ஆண்டுக்கான மருத்துவக் கல்லூரி சேர்க்கையின் புள்ளி விவரம் இதோ:
திறந்த போட்டிக்குரிய இடங்கள் : 460 [ இதில் பிற்படுத்தப்பட்டவர்கள் : 300 +
மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் : 72 + தாழ்த்தப்பட்டோர் : 18 + முஸ்லிம்கள் : 16 + உயர்ஜாதியினர் : 54 ]
இதில் 200க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண் வாங்கியோர் : 8 [ இதில் பிற்படுத்தப்பட்டவர் : 7 + மிகவும் பிற்படுத்தப்பட்டவர் : 1 + உயர் ஜாதியினர் : 0 ]
இப்போது புறிகிறதா? ஏன்? பொது நுழைவுத் தேர்வு எனும் கிடுக்கிப் பிடியை போட துடிக்கிறார்கள் என்று!

தற்போது, நம் மக்கள் கல்வி நீரோடையில் எளிதாக பயனிக்க முடிகிறது என்றால்? அதற்கு காரணம் - 'தந்தை பெரியார்' சமூக சாக்கடையாளர்களை எதிர்த்து, வாதாடி, போராடி, எதிர் நீச்சல் அடித்து பெற்றுத் தந்த சமூக நீதி. அதுவும் ஆயுதம் ஏந்தி; ஆயுதம் என்றால் வன்முறை ஆயுதம் இல்லை – அறிவு ஆயுதம்.

இந்திய அரசு, உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கையை 15% ல் இருந்து 20% ஆக உயர்த்த திட்டமிட்டுள்ள நிலையில்; 'வெண்ணை திரண்டு வரும் நிலையில் தாழியை உடைக்காதவாறு' முடிவெடுத்தால், மத்திய சர்க்காரை வாழ்த்தி வாயில் சர்க்கரை இட்டுக் கொள்ளலாம். இல்லையேல் 'தந்தை பெரியார்' வார்த்தெடுத்த 'சிந்தனை படை' கிளர்ந்தெழும்.

உண்மையுடன்
பொன்னியின் செல்வன்Indian Medical Council | Upload Music

ஆதாரம் :

3 comments:

Balaji 7 January 2011 at 23:26  

maapla ore oru doubt than...ennayum jaathi classificationla sethuda mattenu nambi kekkarein...

intha paarpana pathirikkai-nu sonniye ethellam athu...?

பொன்னியின் செல்வன் 8 January 2011 at 00:20  

நண்பா பாலாஜி பின்னூட்டத்திற்கும் கேள்விக்கும் நன்றி _/!\_

சாதி வித்தியாசம் பார்க்கக் கூடாது என்பதுதான் நம் எண்ணமும் நண்பா !

பார்ப்பன பத்திரிகைகள் என்று குறிப்பிட்டது : விகடன், கல்கி, தினமலர், தினமணி, துக்ளக் போன்றவற்றை.....

பொன்னியின் செல்வன் 14 January 2011 at 22:09  

http://viduthalai.in/new/e-paper/1451.html

Post a Comment

நோக்கம் !

- எண்ணங்களை எழுதுவது

- நயம்பட நகைச்சுவையாய் எழுதுவது

- எளிதினும் எளிதாய் எழுதுவது

பொன்னியின் செல்வன்

My photo
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
பெரியார் கொள்கை பற்றாளன் | தமிழன் | திராவிடன் | பகுத்தறிவாளன் | நாத்திகன் | பூர்வீகம் : திருவாரூரில், கமுகக்குடி எனும் அழகிய ஆற்றோர கிராமம்.

மெயிலில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

நறுமனம்

பிற தோட்டம்