கிருத்துருவ மருத்துவ கவுன்சில்



'கிருத்துருவம்' என்றால்? 'வேண்டும் என்றே' - 'வீம்புக்கு என்றே' – 'சண்டை செய்ய என்றே' – 'வம்பு செய்ய என்றே', போன்ற அர்த்தங்களில் கொள்ளலாம்.

அதற்கு என்ன என்கிறீர்களா? நன்றாய் கேட்டீர் போங்கள்! இந்திய மருத்துவ கவுன்சில் மேற்கொள்ளப் போவதாய் கூறும் நடவடிக்கையைக் கேட்டால், 'கிருத்துருவமும் குறைவோ?' என்றே எண்ணக்கூடும்.

வரலாற்றுக் குறிப்பு : இந்தியா விடுதலை அடையும் முன்னர், தமிழகத்தில் மருத்துவப் படிப்பு சேருவதற்கு 'சமஸ்கிருதம்' கட்டாயமாக தெரிந்திருக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. இதன் உள்ளர்த்தம் என்னவெனில், பார்ப்பனர்  மட்டுமே மருத்துவர் ஆகலாம் என்பதே. 'தந்தை பெரியார்' ஆதரித்த நீதிக்கட்சியின் ஆட்சியில்தான், இந்த நிலை மாறியது. அதாவது, அனைவருமே மருத்துவர் ஆகலாம்; மொழி முக்கியம் இல்லை எனும் நிலை.

'கர்மவீரர் காமராசர்' ஒரு முறை கூறினார்கள்: 'எந்த தாழ்த்தபட்டவன் மருத்துவராயி ஊசி போட்டு, நோயாளி செத்தா-ங்கிறேன்; எந்த தாழ்த்தபட்டவன் இஞ்சினியராயி பாலம் கட்டி, பாலம் இடிஞ்சிச்சு-ங்கிறேன்!'

இந்தப் பதிவு, முன்னரே வெளியான 'கல்வியும் கேள்வியும்' (http://www.ponniyinselvan-katturai.blogspot.com/2010/03/blog-post.html) என்ற பதிவின் தொடர்ச்சிதான்.

ஏன் இவ்வளவு பீடிகை என்றால்? சமீபத்தில், நாடு தழுவிய அளவில் மருத்துவப் படிப்பு சேருவதற்கு பொது நுழைவுத் தேர்வு கொண்டு வரும் திட்டத்தை 'அகில இந்திய மருத்துவ கவுன்சில்' அறிவித்தது. அதுவும் மத்திய  சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அனுமதி பெறாமலே! மருத்துவ கவுன்சிலின் சட்டப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்ற பின்னர்தான், மருத்துவ கவுன்சில் திட்டத்தை அறிவிக்க வேண்டுமாம்.

இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம் – 1956, பகுதி 33, இவ்வாறாக இருக்கிறது:

33. POWER TO MAKE REGULATIONS
The Council may, with the previous sanction of the Central Government, make regulations generally to carry out the purposes of this Act, and without prejudice to the generality of this power, such regulations may provide for:- 
1) ......
...........
...........
12) The conduct of professional examination; qualifications of examiners and the conditions
   of admissions to such examinations;
...........
...........
14) ....

இந்த பொது நுழைவுத் தேர்வை கைவிடக்கோரி தமிழகத்தில், திராவிடர் கழகம் பிரச்சாரம் மற்றும் போராட்டம் செய்தது-செய்கிறது-செய்யும். தமிழக அரசும், பொது நுழைவுத்தேர்வை கைவிடக்கோரி நீதிமன்றதில் முறையிட்டது. பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்கள் எதிர்ப்புக் குரலை எழுப்பின.

திராவிடர் கழகம், 'சமூக நீதி காத்திட' பிரச்சாரமும் போராட்டமும் செய்து கொண்டிருப்பதை, எந்த பார்ப்பன பத்திரிகையிலாவது நுனி மூக்களவாவது வந்திருந்தால் தெரியப்படுத்துங்கள்! எந்த பார்ப்பன பத்திரிகையையும் பார்க்காமலேயே கூறமுடியும், 'அவாள்' செய்தி வெளியிட்டிருக்க மாட்டார்கள் என்று. ஏன் என்றால்? சமூக நீதி என்றாலே 'அவாளுக்கு' கசக்கும். வேண்டுமானால் அரசியல்வாதிகளின் அறிக்கைகளை வெளியிட்டிருக்கக் கூடும்; அதுவும் 'நடுநிலை(!)' என்பது போல் பாவ்லா காட்டிக் கொள்வதற்காக இருக்கக் கூடும். சற்றே சிந்தியுங்கள் தோழர்களே!

தற்போது, இந்தியா முழுவதிலும் இருந்து பல எதிர்ப்புக் குரல்கள் வந்தபிறகுதான் மத்திய அரசும், 'மருத்துவ படிப்புக்கு நாடு தழுவிய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடைபெறும் என்ற அறிவிப்பை உடனடியாக வாபஸ் பெறுமாறு' அகில இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு உத்தரவிட்டுள்ளது.

மகிழ்ச்சி,

மகிழ்ச்சி நீடித்தால் மிக்க மகிழ்ச்சி.

ஏன் கூறுகிறோம்? என்றால், இந்த 'பொது நுழைவுத் தேர்வு' அலை ஓய்வதாக இல்லை. ஏன்? என்றால், இம்மாதம் 11ஆம் தேதியிலிருந்து 13ஆம் தேதிவரை மற்றொரு ஆலோசனைக் கூட்டம் நடைபெறப் போகிறதாம்; கபில் சிபல் அவர்கள் தலைமையில். என்னது? மறுபடியும் முதலில் இருந்தா? ஸ்... அப்பா... முடியல!

அந்த கூட்டத்தின் முடிவு வெளியாகும் வரை பதை பதைப்புதான்.

ஏன்? என்றால், இதே கபில் சிபல் தலைமையிலான கல்வி அமைசகம்தான் சென்ற வருடம், அகில இந்திய அளவிலான பொறியியல் நுழைவுத் தேர்வை அறிவித்தது. பதை பதைப்பின் காரணம் புரிகிறதா இப்போது!

இந்து மதத்தின் வர்ணாசிரம தத்துவத்தின் படி, நாலாம் சாதி, ஐந்தாம் சாதி என்று சமூகத்தில் பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் என்று வரையறுக்கப்பட்ட மாணவர்களுக்கு, 'பொது நுழைவுத் தேர்வு' என்பது, வளர்ச்சியுற மிகப்பெரிய இடையூறாக இருக்கும்.'சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை மட்டும் கொடுக்காதே' என்று இந்து மதத்தின் மனுநீதி கூறுகிறது.

'தந்தை பெரியார்' என்ற சமூக விஞ்ஞானியால்தான் இந்து மதத்தின் அபத்தங்கள் வெளிக்கொணரப்பட்டு பகுத்தறிவு பரவலாக்கப்பட்டு, நம் மக்கள் 'நல்லபடியாக படித்து' முன்னேற முடிந்தது-முடிகிறது-முடியும்.

தமிழ்நாட்டில் 2010ஆம் ஆண்டுக்கான மருத்துவக் கல்லூரி சேர்க்கையின் புள்ளி விவரம் இதோ:
திறந்த போட்டிக்குரிய இடங்கள் : 460 [ இதில் பிற்படுத்தப்பட்டவர்கள் : 300 +
மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் : 72 + தாழ்த்தப்பட்டோர் : 18 + முஸ்லிம்கள் : 16 + உயர்ஜாதியினர் : 54 ]
இதில் 200க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண் வாங்கியோர் : 8 [ இதில் பிற்படுத்தப்பட்டவர் : 7 + மிகவும் பிற்படுத்தப்பட்டவர் : 1 + உயர் ஜாதியினர் : 0 ]
இப்போது புறிகிறதா? ஏன்? பொது நுழைவுத் தேர்வு எனும் கிடுக்கிப் பிடியை போட துடிக்கிறார்கள் என்று!

தற்போது, நம் மக்கள் கல்வி நீரோடையில் எளிதாக பயனிக்க முடிகிறது என்றால்? அதற்கு காரணம் - 'தந்தை பெரியார்' சமூக சாக்கடையாளர்களை எதிர்த்து, வாதாடி, போராடி, எதிர் நீச்சல் அடித்து பெற்றுத் தந்த சமூக நீதி. அதுவும் ஆயுதம் ஏந்தி; ஆயுதம் என்றால் வன்முறை ஆயுதம் இல்லை – அறிவு ஆயுதம்.

இந்திய அரசு, உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கையை 15% ல் இருந்து 20% ஆக உயர்த்த திட்டமிட்டுள்ள நிலையில்; 'வெண்ணை திரண்டு வரும் நிலையில் தாழியை உடைக்காதவாறு' முடிவெடுத்தால், மத்திய சர்க்காரை வாழ்த்தி வாயில் சர்க்கரை இட்டுக் கொள்ளலாம். இல்லையேல் 'தந்தை பெரியார்' வார்த்தெடுத்த 'சிந்தனை படை' கிளர்ந்தெழும்.

உண்மையுடன்
பொன்னியின் செல்வன்



Indian Medical Council | Upload Music

ஆதாரம் :

ராம் செத்தாராம்


கற்பனை கதாபாத்திரமான ராமால், சேதாரம் அதிகம்; அதற்கு ஆதாரம் : பாபர் மசூதி இடிப்பு, மதக்கலவரம், மனித உயிர்கள் இழப்பு.
கற்பனை கதாபாத்திரமான ராமால், ஆதாயம் குறைவு; அதற்கு ஆதாரம் : சேது சமுத்திர திட்டம்.

கடப்பாரை கொண்டு மசூதியை இடித்த காவித்தீவிரவாதிகள் நினைத்து கொண்டிருக்கக் கூடும்; தாங்கள், 'இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்' என்று.
அதாவது, தங்களைக் கேள்வி கேட்க; தவறைச் சுட்டிகாட்ட; யாருமே இல்லை என்ற இறுமாப்பு நிலை.

'புத்தியற்ற காவி பதர்கள்' செய்த மசூதி இடிப்பை, எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

இந்து மதத்தின் சாரமான வர்ணாசிரம தருமம் என்னவெனில்:
கற்பனை கதாபாத்திரமான பிரம்மாவின்- 
முகத்தில் பிறந்தவர்கள், பார்ப்பணன்; கற்பனையான முதல் சாதியாம் :(
தோளில் பிறந்தவர்கள், சத்ரியன்; கற்பனையான இரண்டாம் சாதியாம் :(
தொடையில் பிறந்தவர்கள், வைசியன்; கற்பனையான மூன்றாம் சாதியாம் :(
காலில் பிறந்தவர்கள், சூத்திரன்; கற்பனையான நான்காம் சாதியாம் :(
இதற்கும் கீழே 'பஞ்சமர்' என்றெல்லாம் பிரித்து வைத்திருகிறார்கள் 'புத்தியற்ற காவி பதர்கள்' :( :( :( :(

இராமாயண கற்பனை கதையில், சம்பூகன் எனும் சூத்திரன் தவமிருந்தானம். அப்படி தவமிருந்தவனை, ராமன் எனும் கற்பனை கதாபாத்திரம், தலையைக் கொய்து கொன்றானாம். எப்படி இருக்கிறது நியாயம்? இந்து மத தர்மத்தின்படி சூத்திரன் தவம் செய்யக்கூடாதாம். தவம் உண்மையோ பொய்யோ அதை பிற்பாடுப் பார்ப்போம். ஆனாலும், கற்பனை கதைப்படியே எடுத்துக் கொண்டாலும், சூத்திர சம்பூகனைக் கொல்ல, கற்பனையான முதல் சாதியான பார்ப்பணன் ராமனுக்கு எவன் உரிமை கொடுத்தான்? இதுதான் இந்து மதம் தூக்கிப் பிடிக்கும் சாதிய அடிமைத்தனம். இது என்ன ஓரவஞ்சனை, ராமன் மட்டும் கற்பனை கதாபாத்திரம், சம்பூகன் கற்பனை கதாபாத்திரம் இல்லையா? என்று வருத்தம்கொள்ளத் தேவையில்லை. சம்பூகனும் கற்பனை கதாபாத்திரம்தான். எப்போது என்றால்?, ராமன் எப்போது கற்பனை கதாபாத்திரம் என்ற உண்மை ஏற்கப்படுகிறதோ, அக்கணமே சம்பூகனும் கற்பனை கதாபாத்திரம்தான்!

நன்றாக கல்வி கற்றுவிட்டு, கணினியில் உட்கார்ந்து கொண்டு, கை நிறைய சம்பாதிக்கும் பலர் கூறுகிறார்கள்; 'உன்னை யார் அதை எல்லாம் பார்க்க சொன்னது? இந்து மதத்தில் நல்ல விஷயங்கள் இன்னும் ஏராளமிருக்கிறதே' என்று. சாக்கடையில் எவ்வளவு நல்ல விஷயம் இருந்து என்ன பயன்?

அது எப்படி, 'இந்து பயங்கரவாதிகள்' என்ற வார்த்தையைக் கூறலாம்? என்றால்; யாரை இந்து பயங்கரவாதிகள் என்று குறிப்பிடுகிறோம் என்றால்:
- வர்ணாசிரம தருமத்தை, சிரமப்பட்டாவது 'எப்பாடு பட்டேனும் பிற்பாடு புகுத்துவோர்'.
- சாதி எனும் சாக்கடையை நிலை நிறுத்துவோர். கல்வியாலும், அறிவாலும், உழைப்பாலும் சாதித்து முன்னேற விரும்புவோரை அடக்க, சாதியை ஒரு கருவியாய் பயன்படுத்துவோர்.
- தீண்டாமையை ஆதரிப்பவர். மனிதனை மனிதனாய் பார்க்காமல் மிருகத்தினும் கேவலமாய் நடத்துவோர்.
- தனிப்பட்ட கருத்தை, தன்னுடைய ஆதாயத்திற்காக, அதாவது சுயநலத்திற்காக பிறர்மேல் தினிப்போர்.
இவை மட்டும் நிலையான பட்டியல் இல்லை; இவை நீளும் கூட.

நீங்கள் மேற்கூறிய பட்டியலில் இல்லை என்றால், உங்களுக்கு ஏன் வீன் எரிச்சல்? மாறாக, இந்த பட்டியலில் நீங்கள் இருந்தால், உங்களை நீங்களே மாற்றிக் கொள்ளுங்கள். இது அறிவு யுகம். அறிவு யுகம், அதன் ஆழத்தை அடைவதற்கு முன்னர், அலையாய் ஆர்ப்பரிக்கும் காலம் இது. இப்படி அலை ஆர்பரிக்கும் காலத்தில், இவ்வளவு நாளாக மேற்கூறிய இந்து பயங்கரவாதத் தன்மையை வெளிபடுத்தியவர் யாராயினும்; அவர்களையும், அவர்கள் சேர்ந்தோர் மேலும் இயல்பாகவே பாய்ச்சல் வரும்.

நீங்கள் நேர்மையானவர் என்றால் உங்களை நீங்களே மெச்சிக் கொள்ளலாம்! நம் பாராட்டுகளும் கூட!

ராம் என்ற கற்பனை கதாபாத்திரத்தை, வாதத்திற்காக ஏற்றுக்கொண்டால், அயோத்தியாதான் ராம் என்ற அந்த கற்பனை கதாபாத்திரத்தின் பிறந்த ஊர், என்று ஊகித்து எடுத்துக்கொண்டால் கூட; பல நூறு வருடமாக இருக்கும் ஒரு மசூதியை இடிக்க இந்த கற்பனையான ராம ப(க்)தர்களுக்கு அதிகாரம் வழங்கியது யார்? புத்த விகாரங்கள் பலவற்றை அழித்து அதன் மேல் கோவில் கட்டியதாக வரலாற்று ஆதாரங்கள் இருகிறதே! அப்படி என்றால், அழிக்கப்பட்ட புத்த விஹாரங்கள், மீண்டும் அதே இடங்களில் உருவாவதை இந்த கற்பனையான ராம ப(க்)தர்கள் ஏற்றுக்கொள்வார்கள்? ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்தானே! கற்பனையான ராம ப(க்)தர்களுக்கு ஒரு நீதி; மற்றவர்களுக்கு ஒரு நீதியா?

ராம் என்ற கற்பனை கதா பாத்திரம் எங்கே பிறந்தார் என்று, ஏன் இவ்வளவு கேள்வி?
கற்பனை கதாபத்திரம் என்பதால் மூளையில்தான் பிறந்திருப்பார் :) ! அப்படி என்றால் ராம் ஜென்ம பூமி என்பது மூளையை அல்லவா குறிக்கும்?
[ அதற்கும் மேல் பதில் வேண்டுமானால், உயிரியல் (zoology) புத்தகத்தைப் படித்தால், ராம் எங்கு பிறந்திருப்பார் என்று விளக்கம் கிடைக்கும். அல்லது கனிவான gynecologist இடம் விசாரிக்கலாம் !  இதற்கு மேல் வாயைப் பிடுங்காதீர்கள்! ஆமாங்கானும் :) :) ! ]

ராம் என்ற பெயரை தொடர்பு வைத்துக் கொண்டுதான், இன்றைய தேசிய கட்சிகள் காங்கிரசும், பாரதிய ஜனதா தளமும் வளர்ந்திருக்கிறது. எப்படி என்றால்? 
காங்கிரசை வளர்த்தது காந்தி; காந்தி விரும்பியது ராம ராஜ்ஜியம்.
காந்தியை சுட்டது கோட்சே; கோட்சே சார்ந்தது ஆர்.எஸ்.எஸ்; 
ஆர்.எஸ்.எஸ்-ன் அரசியல் பிரிவுதான் பாரதிய ஜனதா தளம்.
கோட்சே 'சுட்டாராம்'; காந்தி 'செத்தாராம்'!
'சுட்டாராம்' கட்சியைச் சேர்ந்தவர்கள் பாரதிய ஜனதா கட்சியாகவும்; 
'செத்தாராம்' கட்சியைச் சேர்ந்தவர்கள் காங்கிரஸ் கட்சியாகவும் வளர்ந்து இருக்கிறார்கள் :) :) (உபயம் : பெரியார் தாசன்)

தமிழகம், எந்த மத ரணத்திற்கும் ஆளாகாமல், அமைதியாக இருப்பதற்குக் காராணம், ராம் எனும் கானல் நீரான மாயத்தோற்றத்தை கண்டு மதிமயங்காமல் இருப்பதால் தான்.

பக்தி வந்தால் புத்தி போய்விடும்; புத்தி வந்தால் பக்தி போய் விடும். இது எப்படி என்றால்? இதனை ஆங்கிலத்தில் mutual exclusion semaphore என்பார்கள். அதாவது, ஒரு நாணயத்தை சுண்டி விட்டால், பூ விழுமா? தலை விழுமா? ஒரு நேரத்தில் 'பூ' விழலாம். மற்றொரு நேரத்தில் 'தலை' விழலாம். 'பூ' விழுந்தால் 'தலை' விழாது; 'தலை' விழுந்தால் 'பூ' விழாது. அது போல, 'புத்தி' வந்தால் 'பக்தி' வராது. 'பக்தி' வந்தால் 'புத்தி' வராது.

[ எடக்கு மடக்கா கேட்பதாய் எண்ணி, 'எப்போதுமே தல விழுந்தால்?' என்று கேட்டால்; 'அந்த நாணயம், அஜித் ரசிகருடைய நாணயம்' என்றுதான் சொல்ல இயலும். ]

அல்லது, புத்தி இஸ் inversely proportional to பக்தி. பக்தி எப்போது இல்லாமல் போகிறதோ அதாவது சூநியமாகிறதோ, அப்போதுதான் மனிதனின் அறிவு இன்பினிட்டி தொட இயலும்.
புத்தி = k * ( 1 / பக்தி)
எப்போது, பக்தி = 0 ஆகிறதோ,
அப்போது, புத்தி = infinity ஆகிறது!

மாறாக புத்தியை பூஜியமாக்கினால், ஹர ஹர நித்யானந்தா ஆகலாம்; கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ள, அதாவது Accused ஆச்சாரியார் சங்கராச்சாரியார் ஆகலாம். அல்லது, கொலைக் குற்றவாளி பிரேமானந்தா ஆகலாம். அல்லாமல், பக்தியும் புத்தியும் விகிதாசாரத்தில் (proportionate) இருப்பவர்கள், அவரவர் தகுதிக்கு ஏற்ப, அரசியல்வாதியையோ, நடிகரையோ தலைவனாய் கொண்டு, பாலாபிஷேகம் பண்ணலாம் :) :)

வெளிநாட்டுகாரனோ கட்டுமானப் பணியை (construction), ஆட்களை குறைவாக வைத்து, எப்படி செய்யமுடியும் என்று பார்க்கிறான். கற்பனையான ராம ப(க்)தர்களோ எவ்வளவு கூடுதலான கூட்டம் வைத்துக்கொண்டு இடிப்பு (destruction) வேலையைச் செய்திருக்கிறார்கள். சொல்லுங்கள் நீங்களே; கற்பனை கதாபாத்திரமான ஸ்ரீ ராமனால் சீரழியலாமா இந்தியா? காவித்துணி அணிந்து, அமைதி வழியில் நடப்பவர்கள் என்று வாயால் மட்டும் சொல்லிக் கொள்கின்றவர்கள், ஒன்றுகூடி ஒரு மசூதியை இடிப்பது காவித் தீவிரவாதம் தானே.

பகுத்தறிவாளர்களும், மனிதநேயவாதிகளும், மற்றும் கடவுள் எதிர்பாளர்களும் கூறும் சிந்தனை இதில் அவ்வளவும் ஏற்புடையது. இன்றைய தேதியில், அதுவும் இந்த அறிவு யுகத்தில் கடவுளாலும், மதத்தாலும் தான் அமைதி பெருவாரியாக குலைகின்றது. இதை யாராலும் மறுக்க முடியாதே! இவற்றை முன்னிட்டுதான், தந்தை பெரியார் அவர்கள் மனிதநேயம் வளர, சகோதரத்துவம் வளர, சமத்துவம் அடைய வேண்டுமானால்; கடவுள், மத, சாதி, மூட பழக்க வழக்கங்களை வேரோடுக் கிள்ளி எறிய வேண்டும் என்று, தன் வாழ்நாள் முழுதும் பாடுபட்டார். வாழ்நாள் முழுதும் என்பது கூட தவறுதான். ஏனென்றால், பிறக்கும் போதே இந்த புனித செயலுக்காதான் பிறந்தாரா? என்ற எதிர் கேள்வியை இது உருவாகக் கூடும். ஆகையால், பெரியார் அவர்கள் தன்னுடைய பட்டறிவால் உணர்ந்து தெளிந்தது முதல், கற்பனையான கடவுள், மதம், சாதி, மூட பழக்கவழக்கங்களை வேரோடு கிள்ளி எறிய வேண்டும் என்று தன்வாழ் நாள் முடியும்வரை பாடுபட்டார். 

மூத்திரப் பையை தூக்கி கொண்டும் ஊர் ஊராகச் சென்று, இந்து மத பொய் சாஸ்திரங்களில் மறைந்திருக்கும் சூழ்சிகளை எடுத்துக்காட்டி, பகுத்தறிவை பரப்பினார் தந்தை பெரியார் அவர்கள். தந்தை பெரியார் பட்ட அவமானங்கள் சொல்லி மாளாது. அதை எல்லாம் தாங்கிக் கொண்டும், மனித சமுதாயம் முழுமைக்காக உழைத்தார் தந்தை பெரியார். பெரியார் இல்லை என்றால், நாம் இன்றைய நிலை அடைந்திருக்க முடியுமா!


பெரியார் பிறந்த மண்ணில், காவித் தீவிரவாதிகளை 'கெடுப்பார் இலானும் கெடும்' என்பதை உணர்ந்து கொள்வார்கள் !

உண்மையுடன்
பொன்னியின் செல்வன்

ராம் செத்தாராம்

நோக்கம் !

- எண்ணங்களை எழுதுவது

- நயம்பட நகைச்சுவையாய் எழுதுவது

- எளிதினும் எளிதாய் எழுதுவது

பொன்னியின் செல்வன்

My photo
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
பெரியார் கொள்கை பற்றாளன் | தமிழன் | திராவிடன் | பகுத்தறிவாளன் | நாத்திகன் | பூர்வீகம் : திருவாரூரில், கமுகக்குடி எனும் அழகிய ஆற்றோர கிராமம்.

மெயிலில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

நறுமனம்

பிற தோட்டம்