வீடும் விவாதமும்


ல்லம் என்பது இனிய இதயங்களால் ஆனது. அப்படிப்பட்ட இல்லத்திலும், சில நேரங்களில் சந்து பொந்துகளில் புகுந்து சச்சரவுகள் வரும். அப்படிப்பட்ட இனிய இல்லம் தனில் விவாதம் இப்படியும் இருக்கும்! அதாவது, சச்சரவும் சக்கரையாய்! விவாதமும் வெல்லமாய்!

இதோ கற்பனைத் திரை விரிகிறது.

'சோ கால்ட்' வீட்டுத் தலைவன் (எ) கணவன் மற்றும் இல்லாள் இருவருக்கும் இடையே நடந்த சந்தோஷ சண்டையை, கேட்கும் நேரம் வரை மட்டும் கேட்டு, இங்கே கொடுக்கப் பட்டுள்ளது!

வீட்டுக்காரம்மா பயங்கர கோவமா இருக்காங்க,

"நான், புள்ளய கூட்டிட்டுஎன் அம்மா வீட்டுக்கே போறேன்! வீட்டு வேலை எல்லாம்நீங்களே செஞ்சுக்க வேண்டியதுதான் இனிமே; ஆமாம்!"

வீட்டுக்காரய்யா சிரித்துகொண்டு இருக்கார்.
"சரி போறது தான் போற, சீக்கிரமே வந்திடாதேடி! கொஞ்ச நாளாச்சும் நல்ல சாப்பாடு சாப்பிடறேன்"


மணைவி சற்றே சத்தமாய், "ஆமா...! நான் போனா கேக்க நாதி ஏது இங்க? நீங்க உங்க ரூமுக்கு போங்க! நான் என் ரூமுக்கு போறேன்!"மனைவி சத்தம் போடுவதைப் பார்த்து கணவன்,
"வேணாம்டி! நிறுத்திக்குவோம்! வீணா சத்தம் போடாதேடி!"


மனைவி ஏட்டிக்கு போட்டியாய், "ஏன்? நீங்க தான் வாய தொறந்து ஏதாச்சும்பேசறது! என் ரூமுக்குள்ள வராதீங்கன்னு சொன்னா வராதீங்க! அவ்ளோதான்! கல்யாணம் ஆனவொன்ன என்னை சுத்தி சுத்தி வந்தீங்க! இப்ப எரிஞ்சு எரிஞ்சு விழறீங்க"
இடையே, வீட்டுத் தலைவனின் தாயார், தன் பங்குக்கு எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றுகிறார்.
"ஏம்மா! வாழ்கைன்னா, ஏத்த இறக்கம் இருக்கதான் செய்யும்! வாழ்கைன்னா, ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக் கொடுத்து அனுசரிச்சுதான் போகனும்!"


விடுவாளா இல்லாள்! அவள் பங்குக்கு அப்போதே ஏதாவது சொல்லி ஆக வேண்டுமே! எவ்வளவு சீரியல் பார்க்கிறாள்!
"உங்க அம்மாவெல்லாம் இதில தலையிட வேண்டாம்ன்னு சொல்லிடுங்க, ஆமாம்! அப்புறம் நல்லா இருக்காது! ஆமாம் சொல்லிட்டேன்!"


இந்த ஐ.நா தலையீட்டை, வீட்டுத் தலைவன் நிறுத்தவில்லை என்பதால்; இல்லாள் அடுப்படி புகுந்து பத்ரகாளி பாத்திரம் ஏந்தி, கொஞ்சம் கொஞ்சமாய், டமார் டமார் என்று வீட்டு பாத்திரங்களை உருட்டுகிறாள்.

மேலும், அடுக்களையில் இருந்து பின்வருமாறு அசரிரீ கேட்கிறது.

"இன்னிக்கு சமையல் கிடையாது, ஹோட்டலில் தான் எல்லோரும் சாப்பிடனும்! நாந்தான் தண்டசோறு வடிச்சு கொட்டனும்னு தலையெழுத்தா?"


கணவன், முதல் முறையாய் ஆத்திரம் கொண்டவனாய்,
"என்னடி ஓவரா பேசற? ஒவரா பேசின, கை கால ஒடிச்சிருவேன்!"


.................................................
.................................................
.................................................
.................................................
.................................................


கடைசியாய், வீட்டுத் தலைவன் தன் 'சோ கால்ட்' பட்டத்தை தக்க வைத்து கொள்ளும் விதமாய்,  "சரி.. சரி.. வழக்கம் போல நானே சரண்டர் ஆய்டறேன்!!"


.................................................
.................................................
.................................................
.................................................
.................................................


 "என்னடி! இன்னும் மொனகிட்டு இருக்க!... மழை விட்டும் இன்னும் தூவானம் விடலியா !!"'கேட்கும் நேரம் வரை' இனிதே முடிந்தது! திரை மூடுகிறது!
[ ஏய்! நீ டிரைவிங் கத்துக்க, ஒரு ஃபேமிலிய  ஏன் டேமேஜ் பண்ற! ]

5 comments:

அசரீரி 24 November 2009 at 19:33  

குறியீடுகளாலேயே ஒரு கதையை நகர்த்திச் சென்றது புது முயற்சி! :-))

பொன்னியின் செல்வன் 26 November 2009 at 20:21  

_/!\_ அசரீரி அவர்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

Balaji 27 November 2009 at 06:46  

ரூம் போட்டு யோசிப்பியா டா? நல்லா இருக்கு

கிருபாநந்தினி 28 November 2009 at 19:09  

அசரீரி கிடைக்கலீங்ணா! படித்துறைதான் கிடைச்சுது. அந்தப் பேர்லயே பிளாக் ஆரம்பிச்சிருக்கேன். நீங்களும் வந்து படிச்சுக் கருத்துப் போட்டிங்க. ரொம்பத் தேங்க்ஸுங்ணா!

murali 29 November 2009 at 15:57  

ungal kavithaiyai vemarchikka negal than ungalukku negar.. avalavu alaku.. tamil ucharippukal megakavum alaku serkinrana....
ungal pugal paravattum..valaka tamil...

Post a Comment

நோக்கம் !

- எண்ணங்களை எழுதுவது

- நயம்பட நகைச்சுவையாய் எழுதுவது

- எளிதினும் எளிதாய் எழுதுவது

பொன்னியின் செல்வன்

My photo
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
பெரியார் கொள்கை பற்றாளன் | தமிழன் | திராவிடன் | பகுத்தறிவாளன் | நாத்திகன் | பூர்வீகம் : திருவாரூரில், கமுகக்குடி எனும் அழகிய ஆற்றோர கிராமம்.

மெயிலில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

நறுமனம்

பிற தோட்டம்