உள்ளத்தின் குரல்

சொல்’  - இதைப் பற்றி, திருவள்ளுவர் எவ்வளவோ சொல்லி இருக்கிறார்! சொற்களின் சிக்கனத்துக்கு திருவள்ளுவரே ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. ஏழே வார்த்தையில் கருத்தையும்; அதே நேரத்தில் உவமைகளையும் கூறி; சொற் சிக்கனத்தை போதித்த திருவள்ளுவர் தான், இன்றைய நவீன யுக ட்விட்டர்-களுக்கும்(Twitter) முன்னோடி!

இப்படியாக ட்விட்டர் புண்ணியங்களால் சொற்களைக் கூட சிக்கனம் செய்து விடலாம். ஆனாலும், கேள்வி செல்வமான கேட்பதில், சிக்கனம் செய்ய முடியுமா? என்றால்; அதுதான் முடியாது.

வாயைத் திறந்துவிட்டு, பேசாமல் கூட இருந்து விட முடியும். ஆனாலும், ஒருவர் வாய் திறந்து பேசி விட்டால்; அதைக் கேட்காமல் தான் இருந்து விட முடியுமா?  பேசுவதைக் கூட தடுத்து விட முடியும்; கேட்பதை தடுத்துவிட முடியாது. நிறைய கேட்க வேண்டும் என்பதால்தான் இயற்கையிலேயே இரண்டு காது இருக்கிறது; ஒரு நாக்கு இருக்கிறது. நாக்குக்காவது கதவு இருக்கிறது. காதுக்கு ஏது கதவு? பல நேரங்களில்; பேச்சை, கேட்டு கேட்டு காது பஞ்சர் ஆகி, ‘ஸ்சே.ம் ப்ளட்………’-இல் அல்லவா முடிகிறது.

வாய், ஆட்டோமெடிக் கதவு போல; அதுவும் மனைவி முன், வாய் தானாகவே மூடிக் கொள்ளும். ஆனால், இந்த காதுக்கு தான் இப்படிப்பட்ட கதவுகள் இல்லை. மனைவியின் ‘தொன தொன’க்களை கேட்டே ஆக வேண்டியிருக்கிறது. என்னது? ‘கேட்டா’; காதில் போட்டுக் கொண்டாக வேண்டியிருக்கிறது! காதில போட்டாதான், உப்பு அளவா போட்ட சோத்த வாயில போட முடியும், சாரே!

காதுக்கு வடிகட்டியும் போட முடியாது. நமக்கு நாமே தான் அந்த கட்டுப்பாடுகளை செய்து கொள்ள வேண்டும். இதைத்தான் பாரதி, ‘பெரிதினும் பெரிது கேள்’ என்கிறார். கேட்பதில், எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். கேட்பதில் மூன்று வகை இருக்கிறது. உடலால் கேட்பது; மூளையால் கேட்பது; உள்ளத்தால் கேட்பது.

உடலால் கேட்பது – தீப்பொறி(!) பேச்சாளர்கள், அடுத்த கட்சி தலைவரைப் பற்றி, ஆ……….பாசமாய் மேடையில் பேசும் போது; சருமத்தால் மட்டும் கேட்டு விட்டால் நன்மை. அதாவது, சத்ததை உடம்புக்கு வெளியிலேயே நிறுத்தி விடுவது. சும்மா… சும்மனாகாச்சுக்கும் கேட்டா போதும். முடிந்தால் அங்கிருந்து ஓடியே விடுவது நலம்.

மூளையால் கேட்பது – அறிவியல் மாநாட்டில், வகுப்பில் கேட்கும் வகை.

உள்ளத்தால் கேட்பது – அதாவது, ‘வாழ்க வளமுடன்’, ‘வாழும் கலை’ போன்ற கூட்டங்களில் கேட்கும் வகை இது. அப்புறம், காதலர்கள் சொல்லும் ‘டெலிபதி’ கூட இந்த வகை தான்.

மகாத்மாக்கள் இதயத்தைத் திறந்து கொண்டு கேட்கிறார்கள். நாமோ, தொலைக்காட்சியை ஆன் செய்து, சீரியலில் ‘நம்ம குடும்பம்’ பார்த்துக் கொண்டே, “அத்தை, ஏதோ முக்கியமான விஷயம் சொல்லனும்-னு சொன்னீங்களே. சொல்லுங்க அத்தை”, எனும் வகை!

குரல்களில் எல்லாம் மிகச்சிறந்த; மற்றும் கேட்க வேண்டிய;உன்னதமான, உண்மையான குரல், நமக்குள்ளே இருக்கும் அந்த உள்ளத்தின் குரல் தான். அந்த உள்ளத்தின் குரல் தான் உண்மையின் குரல்; அறத்தின் குரல்.

இனி, உலகின் வேறு எந்த துக்ளியோண்டு ஒலியும் கேட்க விருப்பமின்றி; உள்ளத்தின் குரலை மட்டும் கேட்டாலே போதும்; என்றேண்ணினால்; சற்றே பொறுப்போம்! நிலவில் ஒலி கேட்காது. ஒலி பிரயாணிக்க ஊடகம் தேவை. 2015-இல் சந்திரனுக்கு மனிதரை அனுப்பும் திட்டம் இருப்பதாய் இஸ்ரோவில் சொல்லப் படுகிறது. அப்படி அனுப்பும் போது, நாமும் நிலவுக்கு சென்று; புற உலகின் ஹை டெசிபல் சத்தத்தின் பிடியில் இருந்து தப்பிக்கலாம். அது அதிக செலவு பிடிக்கும் என்றால்; 2050 வரை பொறுத்துக் கொள்ளலாம். எப்படியும் இன்றைய அரசியல் வாதிகளின் கொள்ளுப் பேரன்கள் தயாரிக்கும் தேர்தல் அறிக்கையில், இலவசமாய், வீட்டிற்கு ஒருவர் நிலவுக்கு சுற்றுலா அனுப்பி வைக்கப் படலாம். உள்ளம் என்ற ஒன்று இருந்து; அந்த உள்ளத்தின் குரல் ஒலித்தால், ஒரு வேளை இலவசத்தை   எதிர்க்கலாம்.


ஹரீஷ்

5 comments:

ரவிபிரகாஷ் 3 November 2009 at 21:49  

\\திருவள்ளுவர் தான், இன்றைய நவீன யுக ட்விட்டர்-களுக்கும்(Twitter) முன்னோடி!// ஹரீஷ், உங்களுக்கு என்ன 27 வயது இருக்குமா? ஆனால், 72 வயது அனுபவஸ்தர் எழுதுவது போன்ற பக்குவப்பட்ட நடையில் உயர்ந்த விஷயங்களை எழுதுகிறீர்கள். ஆச்சரியமாக இருக்கிறது!

விக்னேஷ்வரி 4 November 2009 at 13:25  

நல்ல பதிவு. ஆனால், எங்கோ ஆரம்பித்து எதிலோ முடிந்தது போல் உள்ளது.

பொன்னியின் செல்வன் 4 November 2009 at 21:03  

_/!\_ ரவி சார், பின்னூட்டத்திற்கு நன்றி.. வயது சரிதான் சார்... அனுபவம் ? ... அப்டின்னா ? :-) .. உங்கள் கருத்துகள் ஊக்கம் அளிக்கின்றன சார். நன்றி ..

_/!\_ விக்னேஷ்வரி அவர்களே, பின்னூட்டத்திற்கு நன்றி.. நீங்கள் ஆழ்ந்து படித்திருக்கிறீர்கள் என்பதை உங்கள் பின்னூட்டம் மூலம் உணர்கிறேன். உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன்.

Murali 13 November 2009 at 18:35  

vigneswari, ivar engu aarambithalum thirukurallil mudipar..illai ethil mudithalum valluvathil arambithuirrupar, ithu valluvar ivaruku kodutha varam... (veedu valluvar kottam pakkam illaye ponnieyen selvan)

பொன்னியின் செல்வன் 14 November 2009 at 23:39  

_/!\_ முரளி அவர்களுக்கு.. பின்னூட்டத்திற்கு நன்றி.. (veedu valluvar kottam pakkam illaye ponnieyen selvan) :-) :-) :-):-)

Post a Comment

நோக்கம் !

- எண்ணங்களை எழுதுவது

- நயம்பட நகைச்சுவையாய் எழுதுவது

- எளிதினும் எளிதாய் எழுதுவது

பொன்னியின் செல்வன்

My photo
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
பெரியார் கொள்கை பற்றாளன் | தமிழன் | திராவிடன் | பகுத்தறிவாளன் | நாத்திகன் | பூர்வீகம் : திருவாரூரில், கமுகக்குடி எனும் அழகிய ஆற்றோர கிராமம்.

மெயிலில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

நறுமனம்

பிற தோட்டம்