
இந்தப் பொங்கலுக்கு, பொங்கலோ பானையில் பொங்க, நிகழ்ச்சி நிரல்களோ தொலைக்காட்சியில் பொங்கிவழிந்தன.
எதை எடுப்பது? எதை விடுப்பது? ஆனாலும், கட்டைவிரல் நுனி களைத்துத்தான் போயிருக்கும். ஆமாம்! இருக்காதாப் பின்னே; கட்டைவிரலால் அந்த ரிமோட்டின் பொத்தானை அழுத்தியழுத்தி கட்டைவிரலே தேய்ந்திருக்கும். கழுதைத் தேய்ந்து கட்டைவிரலான கதையாய், கடைசியில் கட்டைவிரல் தேய்ந்து சுண்டுவிரலான கதையாய் அல்லவா ஆகியிருக்கும்.
நல்லவிதமாக, இந்த குழப்பமேதும் இல்லாமல், பிடித்த நிகழ்ச்சிகளை மட்டும் இணையத்தில் பார்த்ததால் கட்டைவிரல் தப்பித்தது.
சூர்யாவின் பேட்டி ஒரு சேனலில் வந்திருந்தது. நிகழ்ச்சியின் முடிவில், மீடியாவைப் புகழ்ந்துத் தள்ளிவிட்டார் மனிதர். ஏனோத் தெரியவில்லை; இடம் பொருள் ஏவல் ஏதென்றறியாமல், 'ஈனம்' எனும் வார்த்தையினால் தோன்றிய சினம் குறைக்கவோ?
சூரியாவின் தம்பி கார்த்தியின் பேட்டிகள் சுவாரசியமாக இருக்கிறது. உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும்போது உள்ளத்தில் இருந்து பேசுவதும்; இயக்குனர் வரும்போது, எழுந்துநின்று மரியாதை செய்வதும்; பெருமைகளை தன்னடக்கத்துடன் ஏற்றுக்கொள்வதும் என பிரமிக்க வைக்கிறார். சிவகுமாரின் மைந்தன் அல்லவா; சூரியாவின் தம்பி அல்லவா!
'நீயா நானா' சிறப்பு நிகழ்ச்சியில் 'பேச்சு' தான் விவாதத்தலைப்பே. பேச்சாளர்கள் அணியில் உள்ள ஊறறிந்த பேச்சாளர்கள் மைக்கைப்பிடித்தால் விட மாட்டேனென்கிறார்கள். கேட்கப்படும் கேள்விக்கு நேராகவும் விடையளிக்க மாட்டேன்கிறார்கள். இதுல TRP ரேட்டிங்க் ஏத்தற மாதிரி, இறுதியில் ஒரு சச்சரவுப் பேச்சை ஒளிபரப்பி, மறக்காமல் 'தொடரும்' போட்டு விட்டார்கள்.
இணையத்தில் பார்த்தாலும் சில நிகழ்ச்சிகளை விளம்பரங்களோடுதான் பார்க்க முடிந்தது. அப்போதுதான் புரிந்தது; விளம்பர இடைவேளையில்தான் நிகழ்ச்சி ஓளிபரப்பாவதை. யாரு சார் சொன்னா பொருளாதாரம் படுத்து கிடக்குன்னு?
அவ்வப்போது, தொகுப்பாளினிகள் வந்து தூய இனிய செந்தமிழில், 'பொங்கள் வால்த்தும்' கூறினர், 'ஷோலர்' வரலாற்றையும் விவாதித்தனர்; உபயம்: ஆயிரத்தில் ஒருவன்.
'தமிழ் படம்' குழுவினரின் கலந்துரையாடல்கள் நல்ல நகைச்சுவையாகவும் காமெடியாகவும் இருந்தன. திரைப்படம் எப்படி இருக்குமோ தெரியவில்லை. 'தமிழ் படம்' பெயரில் 'ப்' இல்லை; ஏனோ தெரியவில்லை. மருதையில் இப்படித்தான் பேர் வைப்பாங்களோ!
இடையிடையே ஸ்ரேயா வந்துப் போனார். அதான் சொல்லியாச்சே 'இடையிடையே' என்று.
முக்கிய சேனல்களில், பட்டிமன்றம் இருந்தன. சாலமன் பாப்பையா பட்டிமன்றமும், இறையன்பு பட்டிமன்றமும் மிகச்சுவையாக இருந்தன. இறையன்பு பேச்சால் பிரமிக்க வைக்கிறார்கள். ஜெயா டி.வியில் பட்டிமன்றம் பயங்கர போர்;முழுமையாகப் பார்க்கப் பிடிக்கவில்லை. விஜய் டி.வியிலோ புதுமையாய் ஆன்மிக பட்டிமன்றம் இருந்தது. தலைப்பு, 'அவதாரம் தோன்றுவது காக்கவா? அழிக்கவா?' என்பதுதான். என்னதான் பேசுகிறார்கள் என்று கேட்டுவிடுவோம் என்று கேட்டதில், பல நேரங்களில் ச்சிப்பு பொத்துகிட்டு வருகிறது. மிக விரைவில் கி.வீரமணியும், கலைஞர் அவர்களும் இந்த தலைப்பில் பட்டிமன்றம் வைத்துப் பேசினால் ஆச்சரியமில்லை.
பொங்கல் தினத்தன்று ஒரு சேனலில், 'பொங்கல் செய்வது எப்படி' என்று ஆதிமுதல் அந்தம்வரை ஓன்னொன்னா விளக்கிக்கொண்டு இருந்தார்கள்.
அது சரி! குழந்தைகள் தினத்தன்று என்ன நிகழ்ச்சி ஒளிபரப்புவார்கள் என்று அவர்களை விசாரிக்க வேண்டும். |
விஜய் டி.வியில், கோபிநாத்துடன் சூர்யா கலந்து கொண்ட நிகழ்ச்சி மயிர்க்கூச்செரிய வைத்தது. குழந்தைகளின் கல்வி மேம்பாட்டுக்காக எடுக்கப்பட்டுள்ள 'அகரம்' ஃபௌண்டேஷனின் செயல்பாடுகள் பற்றித் தெரிந்து கொள்ள முடிந்தது. ஹேட்ஸ் ஆஃப் சூர்யா!
என்ன ஒரே வருத்தம்ன்னா, பொங்கல் அன்று பாட்டிகிட்ட தொலைப்பேசியில பேசமுடியல.பாட்டியின் குரல் கேட்க முடியல. பாட்டி செல்போன் எங்கேயோ எப்படியோ தொலஞ்சிடுச்சாம். பாட்டியோட செல்ஃபோன உபயோகிக்க வாங்கிட்டு போறவங்க, எங்கயாச்சும் மறந்து வச்சிடறாங்களாம். பொங்கல் தினத்தன்று சர்க்கரைப் பொங்கல் சாப்பிட முடிந்தது. வெறும் சக்கரைப் பொங்கல் வாயில போட்டு என்ன பிரயோசனம்; அதுவும் பாட்டியின் குரல்கேட்க முடியாமல் 'செவிக்கு உணவில்லாத போது'!
-பொன்னியின் செல்வன்-
13 comments:
Machi, Happy Pongal to you and Patti :P
நல்ல பகிரல்
Hari,
as usual gud one..i particularly liked this phrase
'தமிழ் படம்' குழுவினரின் கலந்துரையாடல்கள் நல்ல நகைச்சுவையாகவும் காமெடியாகவும் இருந்தன.
"nagaichuvai and comedy" innum pala mozhigal nee arinthirunthaal athanaiyum vanthirukkum...entha alauvukku nee antha nigalchiyai rasithu iruppai enbatharku ithu saandru....
its been a long time since i saw paatti..gud to see her photo here...
nandri
Daran
அன்பின் கார்த்தி
தொலைக்காட்சிப் பெட்டிய விட்டு நகரவே இல்லையா - இத்தனை நிகழ்சிகலும் பார்த்து விமர்சனம் எழுதி - அதுவும் தேய்ந்த கட்டை விரலை வைத்துக் கொண்டு - பாவம் கார்த்தி
பாட்டியுடன் பேச முடியவில்லை எனில் சென்று பார்க்க வேண்டியதுதானே - அதை விட என்ன வேலை.
நல்வாழ்த்துகள் கார்த்தி
சூரியாவின் அகரம் ஃபவுண்டேஷனின் நிகழ்வுகள் பாராட்டத்தக்கவை - இரு முறை ஒளிபரப்பினார்கள். சிவகுமாரின் புதல்வன் என்பதை நிரூபித்து விட்டர்ர்.
இனிய பொங்கல் வாழ்த்துக்களுடன்.
நீர் கூறியதில் முக்கியமாக சூர்யாவின் அகரம் fondation நிகழ்ச்சி என்னை மெய் சிலிர்க்க வைத்துவிட்டது. இந்த வயதிலும் நமக்கு நம்மை அறியாமல் கண்ணீர் வரும் என்று, அன்று தெரிந்து கொண்டேன். உடனே சார்லசிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இதை பகிர்ந்து கொண்டேன். அந்நிகழ்ச்சி பார்த்த பின் நாம் செல்ல வேண்டிய தூரம் எவ்வளவு தொலைவு என்று புரிந்து கொண்டேன். நம்மை மாதிரி பல பேருக்கு அந்நிகழ்ச்சி ஒரு உந்துகோலாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
நகரத்தின் நடை முறைப் பொங்கலை நான்றாகத்தான் அலசியிருக்கீர்கள். அது சரி பாட்டியின் குரலைக் கேட்காதது ஒரு பெரிய குறை தான்.
தலைப்பைப் பார்த்து பாட்டி கூட தான் பொங்கல் கொண்டாடினீங்களோன்னு நினைச்சா, ஒரு வாழ்த்து கூட சொல்லாம தொலைக்காட்சி பார்த்திருக்கீங்க. தலைப்புல என்னா வில்லத்தனம்...
நான் டி.வி. அதிகம் பார்ப்பதில்லை. அதிலும் சிறப்பு(?!) நிகழ்ச்சிகள் என்றால், இன்னும் அலர்ஜி! ‘சுதந்திர தினத் திருநாள்’ சிறப்பு நிகழ்ச்சிகள் என்று சொல்லி ‘யம்மாடி ஆத்தாடி உன்ன மட்டும் எனக்குத் தரியாடி?’ என்று குத்துப்பாட்டு போடுகிற கண்றாவிகளைப் பார்க்கச் சகிக்காது. உங்கள் பதிவைப் படித்தபோது, பொங்கல் திருநாள் நிகழ்ச்சிகளை சேனல் மாற்றி மாற்றிப் பார்த்த உணர்வு கிடைத்தது.
கே.பி.சுந்தராம்பாள் மாதிரி இருக்கிறது உங்க பாட்டியா? மொதல்ல நேரே போய்ப் பார்த்து அவங்களை வணங்கிட்டு, என் வணக்கத்தையும் சொல்லுங்க பொன்னித் தம்பி!
பொங்கல் அன்று தொலைக்காட்சியில் பொங்கீட்டிங்க போல...
சூர்யா நிகழ்ச்சியைப்பற்றி நானும் ஒரு பதிவ போட்டு இருக்கேன் நேரம் கிடைக்கும் போது பாருங்கள்...
http://sangkavi.blogspot.com/
_/!\_ மதி , பின்னூட்டத்திற்கு நன்றி; வாழ்த்துக்களுக்கும்.
_/!\_ ஜோதி அவர்களே! வருக; பின்னூட்டத்திற்கு நன்றி.
_/!\_ நண்பா தரன் வருக; பின்னூட்டத்திற்கு நன்றி. நகைச்சுவை காமெடி எல்லாம் ஒரே அர்த்தம்தான்.ச்சும்மா ஒரு எஃஸ்ட்ரா ஃபோகஸ் கொடுக்கத்தான். வேறொன்னுமில்ல.
_/!\_ சீனா அவர்களே! வருக; பின்னூட்டத்திற்கு நன்றி.ஒன்று புரிகிறது, வேறு யாரோ ஒரு நபர் என்று எண்ணி இந்த இடுகையில் பின்னூட்டி விட்டீர்கள். பரவாயில்லை, வாங்கப் பழகலாம்.
_/!\_ நண்பா அஹமத், பின்னூட்டத்திற்கு நன்றி. ஆமாம் சூர்யாவின் நிகழ்ச்சி நன்றாக இருந்தது. அவர் தந்த உந்துகோல் மேலும் உந்தட்டும்.
_/!\_ கும்மாச்சி அவர்களே வருக! பின்னூட்டத்திற்கு நன்றி. பாட்டியின் குரலை கேட்காததுதான் மிகப்பெரிய வருத்தமே.
_/!\_ விக்னேஷ்வரி அவர்களே வருக! பின்னூட்டத்திற்கு நன்றி. வில்லத்தனம் :) எல்லாம் இல்லைங்க; இவ்வளவு தொலைக்காட்சித் தொடர்கள் பார்த்தாலும் ஒரு Vacuum இருந்தது, அது பாட்டியுடன் பேசாததுதான். அதற்காகத்தான் இந்தத் தலைப்பு.
_/!\_ ரவி சார், பின்னூட்டத்திற்கு நன்றி. 'சிறப்பு(?!) நிகழ்ச்சிகள்' பார்க்காமல் தப்பித்து கொண்டமைக்கு ஒரு ஓ! இணையத்தில் பார்ப்பதால் வேண்டியதை மட்டும் தேர்ந்தெடுத்து வேண்டிய நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம்; அந்த வசதி ஒரு ஜாலி.
_/!\_ கிருபாநந்தினி அக்கா, பின்னூட்டத்திற்கு நன்றி. என்னது 'அக்காவா'? பின்னே பொன்னித்தம்பி-ன்னா சும்மாவா :). உங்கள் வணக்கம் பாட்டிக்கு உரித்தாக்கப்படும்.
_/!\_ Sangkavi அவர்களே வருக! பின்னூட்டத்திற்கு நன்றி. உங்கள் பதிவு வாசித்தேன், நன்றாக இருக்கிறது.
இனிய பொங்கல் வாழ்த்துக்களுடன். பகிர்வுக்கு நன்றி !
Post a Comment