ஏன் கடவுள்?18+  வயதுடையோர் மற்றும் 18- வயதுடையோர் மட்டுமே!

ட! எல்லோருமே வாசிக்கலாம்! விரசம் ஏதும் இருக்காது. சாமியார்களைப் பற்றியும், கடவுளைப் பற்றிய பதிவு என்றால் இப்படிப்பட்ட முன்குறிப்பு அவசியமாகிறது.  இங்கே, சாமியார்கள் பற்றிய செய்திகளை 18+ வயதுடையோர் மட்டுமே வாசிக்கலாம் என்று சொல்லும் நிலை வந்துவிட்டதே என்பதால்தான் இந்த முன்குறிப்பு.

வெளிநாட்டு நண்பர் ஒருவரிடம், 'இந்த' மாதிரி நடந்துச்சு, ஒரு 'இந்த' சாமியார், 'இந்தமாதிரி' ஒரு நடிகையுடன் 'அந்த நேரம் அந்தி நேரம்' என்று இருக்கும் ஒரு 'இந்த' வீடியோ ஆதாரம் டிவியில் 'இந்தமாதிரி' வந்திச்சு என்று சொன்னால்,  அதற்கு அந்த நண்பர் கூறியது, சிரிப்பு வந்து விட்டது; அவர் கேட்டது இது தான், "அது சரி, அந்த சாமியார் ஒப்புதல் இல்லாம எப்படி அந்த வீடியோ எடுத்தாங்க. அது தப்பில்லையா? அதுதானே முதல் தப்பு? அது அந்த சாமியாரோட தனிமையைத் தொல்லை பண்ற மாதிரி இல்லையா?"  என்று கேட்டார். நண்பரோ வெளிநாட்டவர்; அதனால் நம் ஊரைப் பற்றி எல்லாம் அவ்வளவா தெரியல. நண்பர் கூறியதோ, தனிமனித சுதந்திரம் எனும் பரந்த நோக்குடன். பிறகுதான், சாமியார் என்றால் இந்தியாவில் உள்ள விளக்கங்களைக் கூறநேரிட்டது. அவரை நம்பி மக்கள் எவ்வளவு காரியங்களில் இறங்குகிறார்கள். சாமியார்களை கடவுளாக மதிப்பது, சாமியார்களோ மக்களை சல்லியாய் நினைப்பது போன்று பற்பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டது.

பிரமச்சரியம் என்பதும், காவித்துணி என்பதும் வணிக மூலதனம்-Trade capital; பக்தகோடிகள்தான் முதலீட்டாளர்கள்-Investors. பக்த கோடிகளின் காணிக்கைதான் முதலீடு-Investment;  இதைக்கொண்டு இந்தத்தொழிலை சாமியார் எப்படி நடத்துகிறார் என்பதுதான் வணிகதந்திரம்-Business Tricks. இதில் தொழில் போட்டிகள் வேற இருக்கும் போல; ஆக, எது வணிக மூலதனமாக Trade Capital-ஆக வைக்கப் பட்டதோ அதற்கு குந்தகம் விளையும் போது முதலீட்டாளர்கள்-Investors கோபம் கொள்வது வாடிக்கைதானே. அந்த வாடிக்கைதான் சற்றே வேடிக்கையாய், கல்வீச்சு, சூறையாடல் என்ற நிகழ்வுகள் மடங்களின் மீது வந்தன. மேலும், சத்சங்க கூடங்களை சாத்தி நொங்கு எடுத்து கொண்டு இருக்கிறார்கள் மக்கள். ஆக, இது சாமியாரின் தனிமனித உரிமையில்லை. பொதுமக்களிடம் நம்பிக்கை மோசடி.

அதாவது, மக்களை மூடநம்பிக்கையில் மூழ்கவைப்பது, அந்த மூடநம்பிக்கையால் லாபம் பார்ப்பது; லாபம் பார்த்தாலும் பரவாயில்லை சல்லாபமும் செய்கிறார் சாமியார். மக்களின் நம்பிக்கைக்கு குந்தகம் விளைந்ததும், ஆசிரமத்திற்கு பாதகம் விளைந்துவிட்டது.

இந்த சாமியார்கள் இருக்கிறார்களே, சாமியார்களை சந்திப்பதும் சுலபம் இல்லை, இப்போதெல்லாம்; பலநேரங்களில் சிபாரிசுகள் தேவை. இப்போதோ, சாமியார்கள் சந்தியில் இருக்கிறார்கள். இது சாமியார்கள் காலம் போலும். பலநாள் திருடர் ஒருநாள் அகப்படுவார். ஏதோ, டெக்னாலஜிகள் வளர்ந்திருப்பதால், சாமியார்கள் சந்திக்கு வந்திருக்கிறார்கள். இல்லை என்றால் என்ன ஆகியிருக்கும்? சோனி-யாலோ சாம்சங்-காலோ சாமியார் சல்லாபம் சந்திக்கு வந்திருக்கிறது. 

குண்டலினி என்றாவது குண்டக்க மண்டக்க பண்ண, அதே சமயத்தில் போதாத வேளையாய் வீடியோகேமரா 'ரண்டக்க ரண்டக்க' பண்ணிவிட்டது. பாவம் சாமியார் என்ன பண்ணுவார். ஹார்மோன் ஹார்மோனியம் வாசிப்பதோடு நிற்காமல், கூடவே கடம், கிதார் என பின்னிப் பெடலேடுத்து விட்டது போலும்.

திருச்சி, காஞ்சிபுரம், டெல்லி, திருவண்ணாமலை என்று பட்டியல் நீள்கிறது. என்ன பட்டியல் என்றால் சாமியார் பட்டியல்தான். வெளிவந்தது இதுவரை இவ்வளவே. வந்த இவ்வளவும் எள்ளளவுதான் போல. கொள்ளளவு எவ்வளவோ?   புற்றீசல் போல், இன்னும் எவ்வளவோ? யார் அறிவார்...... அந்த சாமியார் நம்பும் சாமி தான் அருள் வாக்கு சொல்ல வீண்டும்.

ஏமாற்றுவது சாமியார் தொழில் எனில் அதைக்கண்டு ஏமாறுவது மக்கள் தப்பல்லவா. ஏமாற்றுபவனை விட ஏமாறுபவனே முட்டாள்.

அதுசரி இப்படிபட்ட சாமியார்களைப் பார்த்து பொதுஜனம் ஏமாறக் காரணம் என்ன? பொதுஜனம் என்ன அவ்வளவு முட்டாளா?   அல்லது இந்த சாமியார்தான் அவ்வளவு அறிவாளியா?

மக்கள் ஏன் இப்படிப்பட்ட சாமியார்களை நம்புகிறார்கள்? இன்றளவும் மக்களுக்கு,  இப்படிப்பட்ட சாமியார்கள்தான் கடவுளின் நேரடி ஏஜென்ட் என்ற நினைப்பு. ஒரு சரக்கை நேரடி டீலரிடம் வாங்குவதற்கும், சப் டீலேரிடம் வாங்குவதற்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா.  நேரடி டீலரிடம் வாங்கினால் சரக்கு திருப்திகரமாக இருக்கும் தரமாகவும் இருக்கும் என்பது மக்களின் எண்ணம்.

ஒருமுறை, விவேகானந்தர் அமெரிக்கா சென்றபோது, அவரிடம் ஒரு பெண்மணி தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டார். அதற்கு விவேகானந்தர் அந்தப் பெண்மனியிடம், 'நீங்கள் ஏன் என்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறீர்கள்?' என்றார். அதற்கு, அந்தப் பெண்மணி, 'நாம் திருமணம் செய்து கொண்டால், உங்களைப் போல் ஒரு குழந்தை பெற்றுக்கொள்ளலாம்' என்றார். அதற்கு,  விவேகானந்தர் உரைத்தது, 'அன்னையே!  உங்கள் பிள்ளையாய் ஏற்றுக்கொள்ளுங்கள் என்னையே'  என்றார். 

ஆஹா! தமிழில் இதைச் சொல்வதில் என்ன ஒரு ரைமிங்;  என்ன ஒரு டைமிங். 'அன்னையே!  உங்கள் பிள்ளையாய் ஏற்றுக்கொள்ளுங்கள் என்னையே' 

அப்படிப்பட்ட மக்கள் எண்ணம் கொண்ட மகான்கள் எங்கே; இப்போது வந்து கொண்டு இருக்கும் சாமியார்கள் எங்கே?

இஸ்லாம் மதத்தலைவர்கள் தான் இப்படிப்பட்ட சல்லாப வழக்குகள் ஏதுமின்றி இருக்கிறார்கள். இஸ்லாம் மதத்தில், ஒரே சமயத்தில் நான்கு மனைவிகள் இருக்கலாம் என்று குர்ரான் சொல்கிறதாம்; அது வேறு கதை. கிறிஸ்தவ பாதிரியாரும் சல்லாப வழக்குகளில் வந்து விட்டார்கள். ஆனாலும் பாருங்கள் இந்து மதத்தில் தான் வீதிக்கு வீதி சாமியார்கள், அவர்களுக்கே உரிய அளவிலான வியாபார யுக்திகளைக் கொண்டும் இருக்கிறார்கள்.

சிறிய கிராமம் எனில், வெத்தலையில் மை வைத்துப் பார்த்து குறி கேட்பதற்கு மக்கள் இருக்கிறார்கள்; வெத்தலையில் மை வைப்பவரைப் பார்த்து, சில மக்கள் குறைகூறுவார்கள்; அப்படிக் குறைகூறுபவரோ எலுமிச்சையில் குங்குமம் வைப்பவராக இருக்கக்கூடும். எலுமிச்சையில் குங்குமம் வைப்பவரைப் பார்த்து, சிலர் குறைகூறுவார்; அப்படிக் குறைகூறுபவரோ பூசணியை நடுரோட்டில் வைத்து பூசை செய்பவராய் இருக்கக்கூடும். பூசணியை நடு ரோட்டில் பூசை செய்வோரைப் பார்த்து, சிலர் குறைகூறுவார்; அப்படிக் குறைகூறுபவரோ மறக்காமல் திருப்பதி சென்று மொட்டையடித்துத் திரும்புவார். வாயில் வேல் குத்துவார்; முதுகில் கொக்கி வைத்துத் தேர் இழுப்பார்; தீச்சட்டி தூக்குவார்; தீமிதிப்பார்; பால்காவடி, பண்ணீர்க்காவடி, புஷ்பகாவடி தூக்குவார்; அனைத்தும் முடித்து விட்டு பீர் அடித்து பல்டி அடிப்பார். கேட்பார் எவரும் இல்லை. கேட்டால், 'எல்லாம் அவன் செயல்' என்பார். எல்லாமே கடவுளின் திருவிளையாடல் என்பார்; அப்படியென்றால், உங்கள் கடவுள்தான் இப்படியும் கேள்வி கேட்கச் சொல்கிறார் என்று எண்ணி கொள்ளுங்களேன்.

ஆக டிகிரி ஆஃப் மூடப்பழக்கம்தான் வேறேயன்றி, மூடப்பழக்கம் என்பது அவரவர் தகுதிக்கேற்ப வசதிக்கேற்ப இருந்துகொண்டுதான் இருக்கிறது. ஏதோ போதாத வேளையாக ராக்கெட் வானை நோக்கி பறக்கிறது. அங்கே எப்படி எலுமிச்சை பழம் வைத்து நசுக்குவது என்று தெரியாமல்தான் விட்டுவிட்டார்கள் போலும். 

அவனவன் கம்ப்யூடரில் இருந்து, லேப்டாப் போய், இப்போ பாம்டாப் வரை வந்தாலும், தலைடாப்பில் உள்ள மூளையில் இந்த மூடப்பழக்கம் மட்டும் இன்னும் ஒழியவில்லை.

அது சரி, இதனால என்ன சொல்ல வருகிறோம் எங்கிறீர்களா? அது நியாயமான கேள்விதானே? உங்களை யார் கேட்க வேண்டாம் என்றது? கேளுங்கள் கேளுங்கள்; கேட்டுக் கொண்டே இருங்கள். பகவான் FM கேளுங்கள். இது மக்களை முட்டாளாக்கும் நேரம்!

நம் கேள்விகள் இதுவே.

அது சரி ஏன் கடவுள் பிறந்தார் ? அல்லது பிறப்பிக்க பட்டார்?   வேறொன்றும் இல்லை, விடை தெரியாத வினாவுக்கு எல்லாம் ஒரு காரணம் வேண்டுமே; அதுதான் கடவுள்; As அறிவியல் accelerates, கடவுள் decelerates; அறிவியல் வளர வளர கடவுள் தேய்கிறார்; கடவுளும் அறிவியலும் indirectly proportion. 

கடவுள் என்கின்ற கோட்பாட்டினால் உள்ள ஒரு நன்மை, நம்பிக்கை. ஆம்! மக்கள் நம்புகிறார்கள். மக்கள் கடவுளை நம்புகிறார்கள். கடவுளை நம்பாதவர்கள் இயற்கையை நம்புகிறார்கள்.

மக்கள் ஏன் நம்புகிறார்கள்? பெருவாரியான மக்கள் நன்மை நடக்கத்தான் கடவுளை நம்புகிறார்கள். நல்லது என்றால், ஒன்று தனக்கென்று இருக்கும்; அல்லது வீட்டுக்கென்று இருக்கும்; அல்லது ஊருக்கென்று இருக்கும்; அல்லது உலகத்துக்கென்று இருக்கும்; அல்லது அண்ட சராசரத்திற்கென்று இருக்கும். ஏதோ ஒன்று, தனக்கோ பிறர்க்கோ எதுவாக இருந்தாலும் நன்மை எனும் எண்ணம் இருக்கும் பட்சத்தில், இதைக் கூட ஏற்கலாம்.

இன்னொரு வகையில் கடவுள் என்பவர், மனிதருக்கு ஏன் தேவைப் படுகிறார் என்றால், அதை psychology என்று கூறலாமோ?, என்னவோ. அதாவது எந்த குற்றம் குறையையும் பகிர்ந்துகொள்ள ஒரு ஆள் தேவை. அந்த ஆள் ஆனவர் கல்லானார். பின்னால், கற்கள் கடவுள் ஆனது. அதாவது, எதையும் அப்படியே ஏற்று கொள்ளும் ஒரு உபாயம். அண்ணன் பேச்சு ஒன் வே! எனும் கணக்காக! அந்த வகையில் மனபாரத்தை இறக்கி வைக்க ஒரு பொருள் தேவைப்பட்டது. அது தான் கடவுள் ஆனதோ?

என்னதான் இருந்தாலும் , எல்லாத்திற்கும் அப்பாற்பட்ட சக்தி ஒன்று இருக்கிறது என்கிறார்கள். இருந்தால் இருந்துவிட்டு போகட்டும். நல்லது தானே. ஆனாலும் ஒன்னு வாங்கினால் ஒன்னு ப்ரீ கணக்கா அந்த 'சக்தி' பல ரூபங்களிலும், பல கோட்பாடுகளுடனும், பல வடிவங்களிலும் போட்டு படுத்தி எடுக்க வேண்டியது இல்லையே.


ந்த மாதிரி போலிச்சாமியார்கள் செய்திகள் அறிய முற்படும்போது, ஆஹா, நாமொன்றும் தவறான முடிவெடுக்கவில்லை என்பதை உறுதி செய்கிறது. எடுத்த முடிவை மேலும் வலுச்சேர்க்கிறார்கள். அதாவது, சமீபத்தில் கி.வீரமணி ஐயாவின் கைகளாலே, திருப்பதி சென்று வந்தவுடன் போட்டுக்கொண்ட கை காப்பை அவிழ்த்து எரிந்தது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. கோவிந்தாவிற்கு வேண்டிக்கொண்ட மொட்டைக்கும் ஒரு பெரிய கோவிந்தா போட்டாச்சு.  ஒரு வேளை கோவிந்தா கற்சிலையுடன் வேண்டியது நடந்தேறியவுடன், மொட்டை போடுவதை நிறைவேற்றாமல் இருந்தால் அதுதான் மிகப்பெரிய சுயநலமாக ஆகிவிடும். அதனாலேயே, ஏதும் நடக்கும் முன்னரே ஒப்பந்தத்தை(!) முடித்துக்கொள்வது ஷேமம்! இதில் ஷேம் ஒன்றும் இல்லை என்றே எண்ணுகிறேன். கண்ட கண்ட ஷேம்பூ போடுவதால், முடி தானாகவே உதிரும் ஒரு நாள்; அது, அறிவியல். ஒருவேளை, அவ்வாறு நடக்கும்போது, 'பார்த்தாயா கோவிந்தா உன்னை தண்டிக்கிறார்' என்றால்; தண்டிப்பது கோவிந்தா அல்ல, கார்னியரும் சன்சில்க்சும் தான். அதுவும் ஷாம்பூவையே ஷேம்பைன் கணக்கா கலந்தடிச்சா, தலைமுடியும் உதிரும், மூளையும் கூட உதிரலாம்.


மேலும், கடவுள் என்ற ஒன்று இல்லை என்றால், குழந்தைகளிடம் நல்ல பண்புகளை எப்படி வளர்ப்பது என்று ஒரு வாதம் இருக்கிறது. இப்படியாக குழந்தைகள் நற்பண்புடன் வளரவேண்டும் என்பதால் வேண்டுமானால் கூட கடவுளை ஏற்றுக் கொள்ளலாம், வாதத்திற்காக. ஆனாலும் குழந்தைகள் நல்ல பண்புகளுடன் வளருவது கடவுளைப் பார்த்து அல்ல; உங்களை பார்த்தும், உங்கள் சுற்றத்தை பார்த்தும்; உங்கள் நடவடிக்கையைப் பார்த்தும்தான். ஆக நல்ல குழந்தைகள் வளர நீங்கள் காரணம் என்பதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியும்.

இன்றைய அளவில், உலகளாவிய பிரச்சினைகளுக்கு மதம் ஒரு முக்கிய காரணம். ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு designated கடவுள் இருக்கிறார். ஏன் அந்த designated கடவுள்ஸ் ஒரு round table conference நடத்தி round robin fashion-இல் வருடத்திற்கு ஒருவர்தான் கடவுள் என்று வைத்துகொண்டால் சிறப்பாக இருக்குமே. என்று, இப்படியெல்லாம் பாட்டிகிட்ட காமெடியா பேசினா போதும், பாட்டி உடனே, 'அப்படி எல்லாம் சொல்ல படாது; தப்பு. சாமி கன்ன குத்தும்' என்று ரெண்டு விரலை நீட்டிக்காட்டுவார்கள். நாமோ புன்னகையே பதிலாய் சொல்லமுடியும். பாட்டிக்கு, பகவான்தான் எலாதையும் பாத்துக்கிறார்னு நினைப்பு. நமக்கோ, பாட்டிதான் எல்லாத்தையும் பார்த்துக்கொள்கிறார்கள் என்று எண்ணம்.

நீங்களே சொல்லுங்க பாஸ்? நமக்கு கடவுள் வேண்டுமா அல்லது பாட்டி வேண்டுமா?

நேக்கு பாட்டி; நோக்கு?-பொன்னியின் செல்வன்-
19 comments:

தமிழ் மைந்தன் 6 March 2010 at 15:06  

மிக அருமையான பதிவு.

இந்த பதிவை படித்து தங்கள் மேலான கருத்தை பதியவும்:

ஜட்டி சாமியும், ரஞ்சி மாமியும், பொட்டி சாருவும் செய்ததில் என்ன தப்பு ?

http://vanakkamnanbaa.blogspot.com/2010/03/blog-post.html

Muthu Vijayan 6 March 2010 at 18:23  

மிக அருமை.... ஆங்காங்கே நகைச்சுவை... சிந்திக்க வைக்கும் கருத்துக்கள் அருமை....
ஆனால் எவனோ ஒரு சாமியார் செய்த தவறுக்காக கடவுள் நம்பிக்கை தேவை இல்லை என முடிவுக்கு வர கூடாது அல்லவா?
கடவுள் நம்பிக்கை மற்றும் மூடநம்பிக்கைக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்பது என் கருத்து.

Dimelo 6 March 2010 at 19:40  

'அன்னையே! உங்கள் பிள்ளையாய் ஏற்றுக்கொள்ளுங்கள் என்னையே'
Hmm I took the message!!! :)

Very nice article. At least people now start to trust themselves rather than these so called Godmen!

Kudos for your article. Harish, your writings become more interesting and Im seeing lot of improvements. Guess I should stop blogging after reading this. Very nice flow and love your Tamil and the humor skill sets!!!!!!

Cheers!!!
RaaM

நிகழ்காலத்தில்... 6 March 2010 at 21:13  

\\நமக்கு கடவுள் வேண்டுமா அல்லது பாட்டி வேண்டுமா?

நேக்கு பாட்டி; நோக்கு?\\ கட-உள் தான் தேவை..
\\As அறிவியல் accelerates, கடவுள் decelerates; அறிவியல் வளர வளர கடவுள் தேய்கிறார்; கடவுளும் அறிவியலும் indirectly proportion.\\

நான் அப்படி நினைக்கவில்லை.. நெருங்கி வருவதாகத்தான் நான் நினைக்கிறேன்..

balasaraswathi 6 March 2010 at 21:26  

Your writings are so interesting and thought provoking ! Keep it up !!

- balasaraswathi

நாளும் நலமே விளையட்டும் 7 March 2010 at 00:34  

கடவுள் இயற்கை என்று எடுத்துக் கொண்டால் அந்தக் கடவுளை அறிவதில் அறிவியல் துணை நிற்கிறது.
அல்ல! அல்ல! கடவுள் தான் இந்த உலகை படைத்தார் என சொன்னால் இல்லை ! இல்லை! அது மூட நம்பிக்கை.!
என சொல்லி கடவுள் இந்த உலகை உருவாக்க வில்லை என மெய்ப்பிக்க அறிவியல் முயற்சிக்கிறது என சொல்லலாம்.

நீங்கள் சொன்னது போல் கடவுள் என்னும் கருத்தாக்கத்துக்கும், அறிவியலுக்கும் ஒன்றை ஒன்று விலக்கும்.
நியூட்டன் விதி போல் கடவுளுக்கு எதிர் சக்தி அறிவியல் சிந்தனை.

Chocka Sivakumar 7 March 2010 at 02:02  

Very nice. Even few people in science tend to be irrational. When it comes to religion and rituals, even learned people refuse to 'THINK'.
Indirectly proportional... it is inversely proportional...
People like Veeramani, M.K. etc. who used Periyar's name failed to spread his message.

Chocka Sivakumar 7 March 2010 at 02:09  

//ஆனால் எவனோ ஒரு சாமியார் செய்த தவறுக்காக கடவுள் நம்பிக்கை தேவை இல்லை என முடிவுக்கு வர கூடாது அல்லவா?
கடவுள் நம்பிக்கை மற்றும் மூடநம்பிக்கைக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்பது என் கருத்து //

முத்து,
கடவுள் என்பதே மூட நம்பிக்கை தான் என்பதே உண்மை.
கடவுள், அல்லது ஒரு சக்தி என்பது இருப்பது உண்மையாகவே இருந்தால், அதன் செயல்பாட்டை யாரும் கண்டதில்லையே...
செயல்படாத ஒரு பொருள் இருப்பின் என்? இல்லாவிடில் என்?

What is your rational explanation for the existence of GOD?

பொன்னியின் செல்வன் 7 March 2010 at 15:38  

Email from Mr.Dhana Sivam,


1st - Nithyananda issue is a mistake (I agree) but it is not . People are born to do mistake but the one who comes out after realsing it is a human. That is his personnal life and the video taken without his knowledge is a blendour. If he has done with lot of people or did something like kancheepuram sami or premanandha then we can say he is sabalam pudithavan.He has not done any bad or damge to any of the public who has invested or believing him. He is also human and he has also feelings. Ex: If he says that he is going to marry her , can anybody oppose and this huge issue will dissolve in few days. I am also surprised to see that lot of news/channel/book/people are coming now that he has occupied land/forest , has built ashram by destroying the forest.... They also prescrbing to refer the old pubishing. if that is yes , why it was kept in dark so many days and if those public/news people are effective public servant they should have not closed till the end.

2nd - Kadavul is a feeling by any means.Can anybody show or see Love.. No. because it is a feeling by his own for any individual and to make himself relax or reduce his mental stress.... you are happy to remove the ring by veeramani .. why is it so? Why can't you do it by yourself ... What he has done for you. If u would have done the same by your patti, papa, ma then it is great as they helped you to become like that.

Suppose if u would not met him and chance to meet him only after 10 years of now , you might have not removed that ? am i right.... So it is a good feeling for you to remove that by him .. As like that , people tie the knot with a feeling..

murali 9 March 2010 at 16:30  

nice article harish, keep on going..
but thirupathi kappai, veeramania ayya kalatyathil enna magilchi, neengale kalati potu irrkalame..
mooda nambikayaum oru vitha nambikaye

பொன்னியின் செல்வன் 9 March 2010 at 20:21  

_/!\_ தமிழ் மைந்தன் அவர்களே வருக! நன்றி. உங்கள் பதிவைப் படித்தாயிற்று, கருத்தைப் பதிந்தாயிற்று

_/!\_ முத்து விஜயன், பின்னூட்டத்திற்கு நன்றி. கடவுள் நம்பிக்கையின் வழிதோன்றலாகத்தானே மூடநம்பிக்கை இருக்கிறது.


_/!\_ ராம், பின்னூட்டத்திற்கு நன்றி. என்னது எழுதுவதை நிறுத்துவதாக ஊகமா? கூடாது... உன் எழுத்துக்களின் தீப்பொறி அறிய ஆவல் உள்ளவர்களில் ஒருவனாக, மென்மேலும் எழுது நண்பா!

_/!\_ 'நிகழ்காலத்தில்' அவர்களே,வருக! பின்னூட்டத்திற்கு நன்றி. உங்கள் கருத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கும் பட்சத்தில் குறையொன்றுமில்லை.

_/!\_ பாலசரஸ்வதி அவர்களே,வருக! பின்னூட்டத்திற்கு நன்றி.

_/!\_ 'நாளும் நலமே விளையட்டும்' அவர்களே,வருக! பின்னூட்டத்திற்கு நன்றி. நியூட்டனின் விதியைப்போல் என்பது கூட, இரண்டும் சமம் ஆனாலும் எதிரெதிர் என்பது போல் ஆகிவிடும். ஒன்று வளர ஒன்று தேயும், என்பது தாழ்மையான கருத்து.


_/!\_ 'Chocka Sivakumar' அவர்களே,வருக! பின்னூட்டத்திற்கு நன்றி. வீரமணி போன்றவர்கள் இருப்பதால்தான் இன்றளவும் பெரியார் கொள்கைகள் பரப்பப்படுகின்றன என்றே என்ணுகிறேன். மிக அருமையான கேள்வி ஒன்று எழுப்பியுள்ளீர்கள் 'செயல்படாத ஒரு பொருள் இருப்பின் என்? இல்லாவிடில் என்?' மேலும், நீங்கள் குறிப்பிட்டது போல், 'Inversely Proportional' என்பதே சாலப் பொறுத்தமான வார்த்தைகள். நன்றி!

_/!\_ 'தன சிவம்' அவர்களே,வருக! பின்னூட்டத்திற்கு நன்றி. நித்யானந்தா தன்னை ஒழுக்கமானவராக காட்டிக்கொண்டு மக்களை ஈர்த்து மக்களை முட்டாளாக்கியதுதான் இங்குப் பிரச்சினை. மற்றபடி தனிமனிதராக இருக்கும் பட்சத்தில் இதில் யாரும் தலையிட இயலாதுதான். வீரமணி அவர்கள் பற்றிய சில யூகங்களை கேள்வியாய் வைத்து இருக்கிறீர்கள். யூகங்களுக்கு எப்படி பதிலளிக்க இயலும்? நிகழ்வுகளுக்கு வேண்டுமானால் பதில் அளிக்கலாம். வீரமணி அவர்கள் பற்றிய உங்கள் கேள்விக்கு கீழே விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.


_/!\_ 'murali' அவர்களே,வருக! பின்னூட்டத்திற்கு நன்றி. மூடநம்பிக்கை மூழ்கடிக்கப்பட வேண்டிய நம்பிக்கை அவ்வளவுதான்!கடந்த ஆறு மாதமாகத்தான், வீரமணி ஐயா அவர்களின் சொற்பொழிவை தொடர்ச்சியாக கேட்டுக்கொண்டும் பார்த்துக்கொண்டும் வருகிறேன். மேலும், கடந்த சிலமாதமாக விடுதலை நாளிதழையும் தொடர்ந்து வாசித்து வருகிறேன்.


இவ்வளவு நாளாக, பெரியாரைப் பற்றி ஏட்டளவில் தெரிந்ததை விட, பெரியாரின் கொள்கைகளை ஏட்டளவில் அறிந்ததை விட, வீரமணி ஐயா அவர்களின் சொற்பொழிவை இணையத்தில் பார்த்து கேட்ட பின்னால்தான், பல கேள்விகள் உள்ளத்தில் எழுந்தன. பல ஆக்கபூர்வமான சிந்தனைகள் விதைக்கப்பட்டன.

வீரமணி ஐயா அவர்களின் சொற்பொழிவை கேட்க http://www.youtube.com/user/periyartv

விடுதலை நாளிதழின் லிங்க்,
http://viduthalai.periyar.org.in/

அந்த லிங்கில், வீரமணி ஐயா அவர்கள் பேசிய அனைத்து சொற்பொழிவுகளையும், பேட்டிகளையும் வீடியோவாக பார்க்கவும் கேட்கவும் நேர்ந்தது. அதிலும் பல வீடியோக்களை பலமுறை பார்த்தும் கேட்டும் ரசித்தவை. வீரமணி ஐயா அவர்கள் பேச்சில் சிறப்பம்சமாக உள்ளது என்னவெனில் தீர்வை சொல்வதல்ல; மாறாக, கேள்விகள் கேட்டு கேட்பவரையே தீர்வை அடைய செய்வது.

அப்படி பல சொற்பொழிவுகளைக் கேட்ட பின்னரே, திருப்பதி சென்றபொழுது போட்ட காப்பை அவிழ்த்து எறியும் எண்ணமே வந்தது. அந்த வகையில், இந்த எண்ணம் வர பேருதவியாய் இருந்ததே வீரமணி ஐயா அவர்களின் சொற்பொழிவுகள்தான். அப்படி இருக்கையில் காப்பை அவிழ்த்து எறிந்ததில், வீரமணி ஐயா அவர்களின் பங்கும் இருக்கிறது. நல்ல வாய்ப்பாக, அவர்களை சந்தித்த வேளையிலே, ஐயாவின் கையாலே இந்த காப்பை கழட்டி எறியும் நல்ல வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியாயிற்று. இத்தனைக்கும், வீரமணி ஐயா அவர்கள், 'இந்த காப்பை தூக்கி எறியாமல் வேறு ஏதேனும் நல்ல உபயோகத்துக்கு பயன்படுத்துங்கள்' என்றுதான் கூறினார்கள் என்றால் அவர்களின் பகுத்தறிவுக்கு வேறென்ன சாட்சி. ஆக இந்த காப்பை கழட்டுவதற்கும், வேண்டுதல் எண்ணத்தை கைவிடுவதற்கும் துணை புரிந்தது ஐயா வீரமணி அவர்களின் சொற்பொழிவுகளே. அந்த வகையில்தான், பகுத்தறிவு எண்ணத்தை விதைத்த ஐயாவின் கைகளாலேயே அறுவடையையும் மேற்கொண்டது, அதாவது காப்பை கழட்டி எறிந்ததில் பெருத்த மகிழ்ச்சி.

Murali 9 March 2010 at 21:26  

ithukkum samiyar? kayyal maalai ittu kondu santhosa padupavargalukum enna vithyasam harish..ungal veeramani nambikkai valarattum..

பொன்னியின் செல்வன் 9 March 2010 at 22:27  

முரளி அவர்களே, இரண்டுக்கும் என்ன ஒற்றுமை இருக்கிறது! அதாவது, சாமியார் கையால் மாலை போடுவதிலும், ஐயா கைகளால் மூடநம்பிக்கையான காப்பை அவிழ்த்து எறிந்ததிலும்?

என் எண்ணம் என்னவாக இருந்ததென்றால்,நல்ல சிந்தனையை விதைத்தவர் கையாலேயே, விதைத்தவர் முன்னிலையிலேயே நற்செயலையும் நிறைவேற்றினால், பசுமரத்தாணிபோல் மனதில் பதியும் என்பதுதான்.

நீங்கள் என்ன சொல்கிறீர்கள். அப்படி செய்திருக்க கூடாது என்கிறீர்களா? அல்லது அப்படி செய்துவிட்டு மகிழ்ச்சி அடையக்கூடாது என்கிறீர்களா?

murali 12 March 2010 at 17:52  

harish I appreciate what you have done and I am happy that you are happy. what I am not agreeing is mooda namibikai.. you believe in something and someone else believes in something else and both are believes

Anonymous 12 March 2010 at 18:58  

நீங்கள் எடுத்த முடிவு சரிதான் பொன்னியின் செல்வன்!
ஆனால் சுயமாக சிந்தித்து எடுக்கும் முடிவு சாலச் சிறந்தது.

அன்புடன்,
அறிவு.

www.bogy.in 14 April 2010 at 15:00  

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

www.bogy.in 14 April 2010 at 15:02  

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

நா.பூ.பெரியார்முத்து 10 May 2010 at 11:04  
This comment has been removed by the author.
நா.பூ.பெரியார்முத்து 10 May 2010 at 11:07  

பதிவு அருமை,

அதிலும் ஒலி வடிவத்தில் உள்ளது,
தொடரட்டும் உங்கள் பணி


நான் உங்களிடம் பேசவேண்டும் தோழர்

http://thamilaninkural.blogspot.com/

Post a Comment

நோக்கம் !

- எண்ணங்களை எழுதுவது

- நயம்பட நகைச்சுவையாய் எழுதுவது

- எளிதினும் எளிதாய் எழுதுவது

பொன்னியின் செல்வன்

My photo
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
பெரியார் கொள்கை பற்றாளன் | தமிழன் | திராவிடன் | பகுத்தறிவாளன் | நாத்திகன் | பூர்வீகம் : திருவாரூரில், கமுகக்குடி எனும் அழகிய ஆற்றோர கிராமம்.

மெயிலில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

நறுமனம்

பிற தோட்டம்