இனி ஒருமுறை பார்ப்போமா பிரபாகரனை !! ?? !!கவிஞன் ஒருவன் சொன்னான்,
ஒருவன் விழுந்தால் ஓராயிரமாய் எழுவோம் என்று...
அது இனியும் நடக்குமா ....

கொள்கையில் பிடிப்புடன் இருந்து இறந்ததால், இப்பொழுது, தன் கனவுகளை பல கோடி மக்கள் மனதில் நங்கூரமிட்டு சென்றிருக்கிறார்.
ஆல மர வேரை மாய்த்திடலாம், ஆனாலும் வேர் இட்ட விழுதுகள் இப்பொழுது நிலத்தில் வேர் ஊன்ற பெற்றுள்ளனவே ...........

அன்றொரு நாள் ஒருவர் செயலில் வீரத்தையும்........ நிஜத்தில் மானத்தையும் இழக்காமல் வாழ்ந்தார்.......
அவர் நினைவாகவே உனக்கு இப்பெயர் இட்டோம் என்று இனி வரும் நாளில், குழந்தைகளுக்கு நாம் சொல்லும் காலம் வர தான் போகின்றதோ என்னவோ ? சூட்டும் பெயரிலாவது வீரமும் மானமும் போற்றப் படட்டும்.

இருக்கும் போது போற்றுவதில்லை .... இல்லாத போது தானே இருந்தவரின் அருமை தெரியும் ....
அதிலும் இருந்தவர், கொண்ட உறுதியிலும் கொள்கையிலும், பிடிப்புடன் இருந்ததினால் இனி வரும் காலம் அவரை என்ன வென்று வாழ்த்தும் ... வாழ்த்துவதா .... தாழ்த்தாமல் இருந்தாலே போதும் ...

கடைசி மூச்சு உள்ள வரை போராடுவோம் என்று வாய் கூசாமல் கூறுவதை பல முறை கேட்டிருக்கிறோம் மேடையில்.
அதை இன்றே கண்டிருக்கிறோம். மேடையில் இல்லை, நாற்புறமும் சூழப்பட்டு, சுட்டு வீழ்த்தப்பட்டு பாடையில்....
தன் உயிரையும் கொடுத்து, உச்சந் தலையில் மொழி இன உணர்வை உரைக்கும் படி செய்திருக்கிறார் ...
நம் மொழியின் இன மக்களுக்கு ஒரு காவலன் இருந்தான் .. இன்றோ அவர் காலனின் காலடியில் ....

அவர் ஒன்றும் அஹிம்சையின் அரசன் இல்லை என்று அறிவு சொல்லுகின்றது ..............................
..
ஆனாலும் இனி ஒருமுறை பார்ப்போமா பிரபாகரனை !! ?? !!

0 comments:

Post a Comment

நோக்கம் !

- எண்ணங்களை எழுதுவது

- நயம்பட நகைச்சுவையாய் எழுதுவது

- எளிதினும் எளிதாய் எழுதுவது

பொன்னியின் செல்வன்

My photo
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
பெரியார் கொள்கை பற்றாளன் | தமிழன் | திராவிடன் | பகுத்தறிவாளன் | நாத்திகன் | பூர்வீகம் : திருவாரூரில், கமுகக்குடி எனும் அழகிய ஆற்றோர கிராமம்.

மெயிலில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

நறுமனம்

பிற தோட்டம்