இந்தி(ய) மொழி !!



தமிழ் மக்களுக்கு இந்தி மொழி அவசியமா என்று கேட்கிறீர்கள்.

ஒரு வார்த்தையில் சொல்வதாய் இருந்தால், 'ஆம்'.

ஒரு வாக்கியத்தில் சொல்வதாய் இருந்தால்,
'தாய் மொழியாம் தமிழ் மொழியும்; தேச இனைப்பு மொழி, மற்றும் அலுவல் மொழியாம் இந்தியும் தெரிந்து கொள்ள வேண்டும்'.

ஒரு பாராவில் கூறுவதாய் இருந்தால்,
'நம் தாய் மொழி தமிழ். அதை நீங்கள் மறைத்தாலும் மறுத்தாலும் பேசித்தான் ஆக வேண்டும்.
இந்தி நம் தேசிய இனைப்பு மொழி. தமிழகம் இந்தியாவில் இருப்பதால் தேசிய இனைப்பு மொழியும் அவசியமே.
இவற்றோடு ஆங்கிலமும் அவசியமே, அப்போது தான் நீங்கள் 'திரை கடல் ஓடி திரவியம் தேடலாம்'.
அப்போது தான் 'WORLD IS FLAT' ஆகும், இல்லை என்றால் குண்டு சட்டியில் குதிரை ஓட்ட வேண்டியது தான். கிணற்று தவளையாய் காலம் தள்ள வேண்டியது தான்'.


ஒரு பாராவிற்கும் மேலே சொல்லி பாடுபடுத்த வேண்டும் என்றால்,
இரயிலை மறித்தவர்கள் மற்றும் தார் பூசி அழித்தவர்கள் பேரன் பேத்திகள் படித்தது என்ன கார்ப்பரேஷன் பள்ளியிலா ?
இல்லையே, எல்லாம் கடைந்து எடுக்க பட்ட ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் (with attached Hindi).
இவை எல்லாம் இந்தி எதிர்ப்பின் வெளிப்பாடா? இல்லையே?

அனால் நாம் வாயை திறந்தாலோ 'இந்தி திணிப்பு' என்று கூறுவர்.
செவ்வாய் கிரகத்தில் இருந்து ஏலியன்ஸ் வந்து மார்ஸ் மொழியா திணித்தது?
நம் இந்தியாவில் பெரு வாரியான மக்களால் பேசப்படும் இந்தியை தானே தெரிந்து கொள்ள சொல்கின்றார்கள்.

தமிழை செம்மொழி ஆக்கி இருக்கின்றோம் என்கின்றீர்கள்.
இருக்கட்டும் .செம்மொழி ஆக்கிய பிறகு தமிழகத்தில் எத்தனை பேர், தமிழையாவது எழுத படிக்க தெரிவதில் கூடி இருக்கிறார்கள்?

யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம், என்றார் பாரதி.
அவர் சொல்லலாம். அவருக்கு அந்த உரிமை இருக்கிறது, ஏனெனில் அவர் தமிழ் கவிஞன்.
மேலும் அவருக்கு அந்த தகுதியும் இருக்கின்றது, ஏனெனில் அவருக்கு பல மொழிகள் தெரியும்.

ஒரு மொழி மட்டும் தெரிந்து கொண்டு, இவர்கள் பேசுகின்ற பேச்சு இருக்கின்றதே, 'நகர்கின்ற ரயிலில், தண்டவாளத்தில் தலை வைத்தோம்' என்று கூறி இன்னும் எவ்வளவு காலம் தான் தள்ள போகின்றீர்கள் தெரியவில்லை. கேட்டால் இந்தி எதிர்ப்பாம்.
ஆமாம் இந்த வீண் வெட்டி பேச்சாளர்களுக்கு இன்னும் தெரியவில்லை ரயிலும் தண்டவாளமும் ஒன்றையே குறிக்கின்றன என்று. ரயில் என்ன மயிலா நகர்வதற்கு? வேண்டுமானால் புகை வண்டி கூவுவது உங்களுக்கு குயில் போல் இருக்கலாம்.

உங்களை எல்லாம் யார் தலை வைக்க சொன்னது.
ஒரு தண்டவாளத்தில் கால் வைத்து, மற்றொரு தண்டவாளத்தில் கழுத்து வைத்து, நடுவில் உடலை வைத்து புகை வண்டியை ஓட வைத்திருந்தால் இந்நேரத்தில் தமிழகத்தில் குடும்ப அரசியலாவது குறைந்திருக்கும்.
.
(மன்னிக்கவும், நம்மிலும் பெரியவர்களை இவ்வாறாக கூறுவதாக தவறாக எடுத்து கொள்ள வேண்டாம். என்ன இருந்தாலும் தலைவர்கள் மேல் உள்ள நல்ல அபிப்ராயத்தால் அவர்கள் தவறுகளை சுட்டி காட்டுவது தவறு இல்லை)

மற்றொரு மொழியை தெரிந்து கொள்வதால் நம் தமிழ் மொழி அழியாது.
சொல்லப் போனால், 'பல நாட்டு சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்திடுவோம்' என பாரதி கூறியது போல் செய்தால் தமிழுக்கு புது வரவுகளே கிடைக்கும்.

இங்கு சில நேரங்களில் தமிழை வாழ வைக்க ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா வாசிகளை அல்லவா நம்ப வேண்டி இருக்கிறது.

தமிழ் நண்பன் ஒருவனும், இந்தி நண்பன் ஒருவனும் ஹோட்டலில் பார்சல் சொல்லி இருந்தார்கள்.
பார்சல் வர லேட் ஆகிவிட்டது. இந்தி நண்பன் கேட்டான், 'வடா ஆயா ஹே ? '
தமிழ் நண்பன் கூறினான், 'ஆமாம் ஆயா சுட்ட வடை தான் !' என்று.
இதெல்லாம் தேவையா ...

சென்னை கடற்கரையில் இந்தி நண்பன் தமிழ் நண்பனை பார்த்து, 'ஸீதா ராஸ்தா ஹே க்யா? ' என்றான்.
தமிழ் நண்பன் கூறினான், 'இங்கே கண்ணகிக்கு தான் சிலை இருக்கு, சீதைக்கு இல்லை. அதுவும் சில நேரம் கானா போய்டும். அப்புறம் திடீர்னு வரும். ஆனா ராமர் பத்தி எதுவும் என்னிடம் கேட்காதே !'

சிரிக்காதீர்கள் .... இதுவும் தேவையா ...

அடிக்கடி தந்தி அடிக்கும் தலைவர்களுக்கு வேண்டுமானால் இந்தி தேவை இல்லாமல் இருக்கலாம். நமக்கு இந்தி அவசியமே !
நமது அண்டை மாநிலங்களின் மொழி தெரிந்து கொள்வதால் பாதகமில்லை.
அதே நேரத்தில்,
நம் தேச இனைப்பு மொழி, மற்றும் அலுவல் மொழியாம் இந்தி தெரிந்து கொள்ளா விட்டால் நமக்கு ஒரு சாதகமுமில்லை !!

ஹரீஷ்

9 comments:

Moulee 27 July 2009 at 05:01  

It may be late to post a comment, it is not wrong to learn other languages. I agree with your points, but India does not have a National language. I am not anti - hindi(I can speak hindi), but it is also wrong to include a wrong fact in the text books and misguide students.

http://en.wikipedia.org/wiki/Languages_with_official_status_in_India

RaaM 21 October 2009 at 22:36  

அடிகடி தந்தி அடிக்கும் தலைவர்களுக்கு வேண்டுமானால் இந்தி தேவை இல்லாமல் இருக்கலாம். நமக்கு இந்தி அவசியமே !
Adikadi "K" missing it is adikkadi :)

Nalla sonna, aana namma hindi kattukura mathiri avanga tamil kaththu kiduvangala?

பொன்னியின் செல்வன் 22 October 2009 at 19:27  

_/!\_ : மௌலீ, பின்னூட்டத்திற்கு நன்றி.

_/!\_ : ராம், பின்னூட்டத்திற்கு நன்றி நண்பா. 'அடிக்கடி' திருத்தப்பட்டது. அவர்கள் 'தமிழ்' கற்றுக்கொள்வது அவர்கள் விருப்பம். ஹிந்தி தேசிய இணைப்பு மொழி என்பதால் தான் அதை கற்று கொள்வது, நமக்கு நன்மை பயக்கும் என்கிறேன். ஹிந்தி ஒரு மாநில மொழியாக இருந்தால் அதை கற்று கொள்ள தேவை இல்லை (அது விருப்பத்தை சார்ந்தது).

Unknown 26 October 2009 at 23:45  

தப்பு, தப்பு!
முதல் தப்பு உங்களின் புரிதல், இந்தி திணிப்பு எதிர்ப்புதான் பின்னாளில் இந்தி எதிர்ப்பாக மறுவிவிட்டது.
\\ஆமாம் ஆயா சுட்ட வடை தான் !\\
\\இங்கே கண்ணகிக்கு தான் சிலை இருக்கு, சீதைக்கு இல்லை.....\\

ஆக நம் இந்தி நண்பர் வந்திருக்கும் இடம் என்னவோ தமிழகம்தான். இங்குதான் சிறிது நிதானம் தேவை. ஏதோ உங்கள் நன்பர் வடநாட்டுக்கு போய் அங்கே யாரோ இந்தியில் பேசி இவர் தமிழ்ல் பதில் சொன்னது போல் சளித்துக்கொள்கிறீர்கள். இதற்கும் நீங்கள் எழுதிய இன்னொறு தப்பும் சுட்டிக்காட்டப்படவேண்டியதாகிறது. "இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல" அது அலுவல் மொழி, ராஜ் பாஷா (இந்தி), அபீசியல் லேங்குவேஜ் (ஆங்கிலம்)!

கீழே கொடுத்துள்ள சுட்டியில் NDTV நடத்திய நிகழ்ச்சிகளில் கீழே அடுத்தடுத்த காணொளிகளில் தேடிப்பாருங்கள். "should everyone know hindi in inda" என்ற நிகழ்ச்சியை பாருங்கள் உங்களின் பல கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். இந்தியை ஒரு மொழியாக கற்றுக்கொள்வதில் தவறில்லை, (நான் வட இந்தியாவில் இருந்தபோது இந்தி கற்றுக்கொண்டேன்)ஆனால் கல்விக்கூடங்களில் கட்டாயப்பாடமாக்குவது, இந்நாட்டின் அனைத்து மொழிகளையும் குழிதோண்டி புதைப்பத்ற்கே சமமாகும்.


http://www.ndtv.com/convergence/ndtv/new/NDTV-Show-Special.aspx?ID=344

Nallathambi 26 October 2009 at 23:56  

Naan
Nnabar Nalan solvathai vazhimozhihiraen

Nallathambi

பொன்னியின் செல்வன் 27 October 2009 at 00:01  

_/!\ நளன் அவர்களுக்கு பின்னூட்டத்திற்கு நன்றி. இந்தி தேசிய மொழி மட்டும் இல்லை. இந்தி தேச இனைப்பு மொழி, மற்றும் அலுவல் மொழி. அதை திருத்தி விட்டேன்.கீழே மற்றுமொரு தகவல் பகிர்ந்து கொள்ளப் படும்.

பொன்னியின் செல்வன் 27 October 2009 at 00:06  

Before we discuss further, here or few words to consider.
Language -> மொழி
National Language -> தேசிய மொழி
Official Language -> நிர்வாக மொழி
Union Language -> இணைப்பு மொழி
Official Union Language -> நிர்வாக இணைப்பு மொழி
Scheduled Language -> ஒழுங்குபடுத்தப்பட்ட மொழி

"இந்தி நம் தேசிய மொழி." idhuku proof irukaa??
இந்தி நம் தேசிய மொழிதான்.

First, lets refer this authentic government website :
http://www.india.gov.in/knowindia/india_at_a_glance.php.
It is mentioned as,
Languages: There are 22 National Languages have been recognized by the Constitution of India, of which Hindi is the Official Union Language. Besides these, there are 844 different dialects that are practised in various parts of the Country.

Now, lets refer the Indian Constitution available in an another Authentic Government Website :
http://indiacode.nic.in/coiweb/welcome.html
In the Indian constituion, in Eighth schedule, following 22 languages are listed as,
EIGHTH SCHEDULE [Articles 344 (1) and 351]
Assamese
Bengali
Bodo
Dogri
Gujarati
Hindi
Kannada
Kashmiri
Konkani
Maithili
Malayalam
Manipuri
Marathi
Nepali
Oriya
Punjabi
Sanskrit
Santhali
Sindhi
Tamil
Telugu
Urdu
இந்த ஒழுங்குபடுத்தப் பட்ட மொழிகள் லிஸ்ட் பார்க்கும் போது தெரியும் இன்னொரு முக்கிய விஷயம். இந்தியாவில் 22 தேசிய மொழிகள் உள்ளன. தமிழும் தேசிய மொழியே. 'நேபாளியும்' தேசிய மொழியே.
'சமஸ்கிருதமும்' தேசிய மொழியே.

Also the following is mentioned in the Constitution of India,
PART XVII - OFFICIAL LANGUAGE - CHAPTER I.—LANGUAGE OF THE UNION
343. (1) The official language of the Union shall be Hindi in Devanagari script.

இதை வைத்து பார்க்கையில் இந்தி தேசிய மொழியும், மற்றும் நிர்வாக மொழியும் கூட.

என்ன ஒரு வித்தியாசம் என்றால், ஹிந்தி தேசிய மொழி (National Language), to be very precise one of the National Languages.மேலும் அதுவே இந்தியாவில் இணைப்பு மொழி (Union Language), in another way, நிர்வாக மொழி (Official Language) also நிர்வாக இணைப்பு மொழி (Official Union Language).

Another way of better understanding for our discussion.

Hindi = தேசிய மொழி + நிர்வாக மொழி + இணைப்பு மொழி + நிர்வாக இணைப்பு மொழி

Sanskrit = தேசிய மொழி + செம்மொழி

Tamil = தேசிய மொழி + செம்மொழி

ஆக ஹிந்தியை குறிபிட்ட போது அதை தேசிய மொழி என்று மட்டும் குறிப்பிடாமல்,
ஹிந்தி, தேசிய நிர்வாக இணைப்பு மொழி என்று கூறி இருந்தால் இன்னும் சரியாக இருந்திருக்கும்.

தேங்க்ஸ். தவறுகள் திருத்தப்பட்டன.

பின்னூட்டத்திற்கு நன்றி

ஹரீஷ்

பொன்னியின் செல்வன் 27 October 2009 at 00:10  

_/!\_ நல்லதம்பி அவர்களுக்கு; பின்னூட்டத்திற்கு நன்றி. மேலே சில விளக்கங்கள் கொடுக்கப் பட்டுள்ளன.

Unknown 27 October 2009 at 00:20  

நன்றிகளும், பாராட்டுக்களூம்!! :)

Post a Comment

நோக்கம் !

- எண்ணங்களை எழுதுவது

- நயம்பட நகைச்சுவையாய் எழுதுவது

- எளிதினும் எளிதாய் எழுதுவது

பொன்னியின் செல்வன்

My photo
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
பெரியார் கொள்கை பற்றாளன் | தமிழன் | திராவிடன் | பகுத்தறிவாளன் | நாத்திகன் | பூர்வீகம் : திருவாரூரில், கமுகக்குடி எனும் அழகிய ஆற்றோர கிராமம்.

மெயிலில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

நறுமனம்

பிற தோட்டம்