தலைநகரில் வைரஸ் !!தலைநகரில் வைரஸ் என்பதை, நமது தமிழக முதல்வர் டெல்லி சென்றிருக்கிறாரே என்று அரசியலோடு முடிச்சு போடாதீர்கள்.

மருத்துவர் அய்யாவே , உங்களுக்கு டெல்லியில் இருந்து ஒரு முக்கிய வேலை வந்துள்ளது.
பொறுங்கள் ..... பொறுங்கள் ...
மருத்துவர் அய்யாவுக்கு டெல்லியில் என்ன வேலை ? ..
தேர்தல் முடிந்த நேரத்தில் அவர் தைலாபுரத்தில் தலைவலிக்கு தைலம் அல்லவா தேய்த்து கொண்டிருப்பார் என்று அதற்குள்ளாக மீண்டும் தவறாக ஊகம் செய்து கொள்ளாதீர்கள் ...

நாம் கூறுவது மருத்துவ தொழிலில் உள்ள மருத்துவரை .... அரசியல் தொழிலில்(!!!) உள்ளோரை அல்ல ...

மருத்துவரே, SWINE FLU சுரம் என்கின்றார்களே அதைப் பற்றி ஏதேனும் தெரியுமா ...

மெக்சிகோ , அமெரிக்கா, கனடா , இங்கிலாந்து, ஜப்பான் என்று உலகெல்லாம் விஜயம் செய்து, இப்போது புது ஆட்சி வரும் நிலையில், தன் பணியை இங்கே பரப்ப முடியுமா என்று இரு கைகளையும் விரித்து காத்துக் கொண்டிருக்கிறது.

உலகெல்லாம் வியாபித்திருக்கும் இச்சுரம் இந்தியாவிலும் ஒன்று தோன்றி இருக்கிறது, டெல்லியில்.

திருமாலின் ஓர்அவதாரத்தில் (வராக) இருந்து , பிரம்மாவின் சிருஷ்டியில் உருவாகிய அந்த வைரஸ்-ஐ, சிவனின் திருப்பணியான அழித்தல் மேற்கொண்டு , அது மேலும் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகின்றோம் ..
எல்லாம் வல்ல இறைவனை பூசித்தால் எந்த பிணியும் தன் பணியை செய்ய இயலாமல் போகும்தான்.
ஆனாலும்,

      வரும் முன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
     வைத்தூறு போல கெடும் ...

வரும் முன்னர் தான் காக்க முடிய வில்லை, வந்து விட்டதால் இனி பரவாமலாவது தடுக்க வேண்டும்.

அந்த கொடிய வைரஸ் நம் நாட்டில் முதல் முதலாக தன் இடது காலை வைத்து வந்ததாய் எண்ணிக்கொண்டு அதற்கு தகுந்த மாற்று மருந்தால் மாய்த்து விடுங்கள் ...

டெல்லியில், அரசியல்வாதிகள் கூடி அமைச்சகம் ஒதுக்குதலில் பேரம் செய்யும் இவ்வேளையில்,
இதை பரவாமல் தடுக்க அவர்கள் நடவடிக்கை எடுப்பார்களா என்று தெரியாது ..
ஆகையால், தாங்கள் தான் இந்த வைரஸ் பாரத்தை ஏற்று அதை ஓடி ஒளிய செய்து பரவாமல் தடுக்க வேண்டும் ...

பாமரர் ஆகிய நாங்கள் தெரிந்தது எல்லாம் சிவனும் , பெருமாள் பாசுரமுமே ....
இந்த SWINE FLU சுரம் எல்லாம் யாமறியோம் !!

0 comments:

Post a Comment

நோக்கம் !

- எண்ணங்களை எழுதுவது

- நயம்பட நகைச்சுவையாய் எழுதுவது

- எளிதினும் எளிதாய் எழுதுவது

பொன்னியின் செல்வன்

My photo
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
பெரியார் கொள்கை பற்றாளன் | தமிழன் | திராவிடன் | பகுத்தறிவாளன் | நாத்திகன் | பூர்வீகம் : திருவாரூரில், கமுகக்குடி எனும் அழகிய ஆற்றோர கிராமம்.

மெயிலில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

நறுமனம்

பிற தோட்டம்