நிலவில் நூலகம் !

“நூல்……….…..” என்று தொடங்குகின்ற;
அல்லது “……….…..நூல்’ என்று முடிகின்ற;
அல்லது “……நூல்….…..” என்று கொண்ட;

நி
ற்
க.


ப்படி, தொடங்குகின்ற; முடிகின்ற; கொண்ட; என்றவுடன் ‘திருக்குறள்’ தான் போலும் என்று தவறாக எண்ணிக் கொள்ளாதீர்.


சற்றேனும் சிரமப்படாமல், சிந்தித்து சொல்லுங்கள்; ‘நூல்’ என்ற சொல் கொண்ட தமிழ் திரைப்படம் ஏதேனும் ஞாபகம் வருகிறதா? அட்லீஸ்ட். ‘காதல் நூல்’ என்றாவது தமிழ் திரைப்படம் வந்துள்ளதா? யாம் அறிந்தவரை இல்லை. ஆமாம் ! இவரு எல்லா மொழி திரைப்படமும் பார்த்து கரைத்து குடிச்சிட்டாரு; இதில் ‘யாமறிந்த’ ஒன்றுதான் குறைச்சல் !

சற்றே ‘கூகிள்’ செய்து பார்த்ததில், ஒரு தமிழ் திரைப்படம் ‘நூல்’ கொண்டு வெளிவந்தது தெரிந்தது. திரைப்படத்தின் பெயர் ‘நூல் வெளி’.


நகரங்களில், சினிமா கொட்டகையை கூட எளிதில் கண்டு பிடித்து விடலாம்; ஆனால் இந்த நூலகம் கண்டு பிடிப்பதற்கு பெரும் பிரயத்தனம் தான் பட வேண்டும்.

தமிழகத்தில் உள்ள சில சிறந்த நூலகங்கள்; சென்னை கன்னிமரா நூலகம். சென்னை தேவநேயப் பாவானர் நூலகம். தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம். தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகம். அதிலும் தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகம் பல நூற்றாண்டு தொன்மை வாய்ந்தது.


சென்னையில் ஆட்டோ காரனிடம் நடந்த சம்பாஷனை; இதோ கீழே.

"யப்பா…. தேவநேயப் பாவானர் நூலகம் வரை போகனும்.. ஆட்டோ வருமா?"
"அத்து … எங்கக்கீது வாத்யாரே ?"
"அதான்ப்பா… இந்த ஆனந்தோ.. கீனந்தோ ? ஏதோ தியேட்டராமே ? அதுக்கு பக்கத்துலப்பா."
"அத்த மொதல்ல சொல்றதில்லயா வாத்யாரே ! இந்த பொஸ்தகம் எல்லாம் அடுக்கி வச்சிருப்பாங்களே அந்த பில்டிங்க் தானே ! ஏறு சாரே."

இதுதான் இன்றைய மக்களின், ‘நூலகம்’ பற்றிய விழிப்புணர்வின் விகிதாச்சாரம்.இப்படி எல்லாம் கேள்விகள் வந்தால் சந்திரனின் ‘நீர்’ இருந்து தான் என்ன பயன் ? ஒருவேளை, சந்திரனில் ‘நூல்’ இருந்திருக்க வேண்டுமோ ? 

அடுத்த முறை சந்திரயான் அனுப்பப் படும் போது, இந்திய செம்மொழிகளான சமஸ்கிருதத்திலும், தமிழிலும், ஒரு பொது மறை புத்தகத்தை (தமிழுக்கு : திருக்குறள்) நிலவில் வைத்து; சிறு மற்றும் முதல் ‘நூலகம்’ அமைத்து விட்டு வரலாம். பாருங்க, எல்லா விழிப்புணர்வுக்கும் திரைத்துறையையே நம்பிக் இருக்க முடியாது அல்லவா? இப்படி ‘நிலவில் நூலகம்’ வைத்தாலாவது சற்றேனும் நூலக விழிப்புணர்வு ஏற்படலாம் ! எவ்வளவோ யோசிக்கிறோம், இத யோசிக்க மாட்டோமா !


பாட்டி வடை எல்லாம் சுடுறாங்க நிலாவில் ! ஒருவேளை, பாட்டி சுட்ட வடை ஜவ்வு மாதிரி ‘நூல் நூலா’ இருக்கு என்று சொல்லி; “அட! நம்ம பாட்டி நிலாவில் ‘நூல்’ எல்லாம் வச்சிருக்காங்களே” என்று சொல்லியும் பெருமை பட்டு கொள்ளலாம்.


ஹரீஷ்

3 comments:

ரவிபிரகாஷ் 21 October 2009 at 19:45  

//எல்லா விழிப்புணர்வுக்கும் திரைத்துறையையே நம்பிக் இருக்க முடியாது அல்லவா? இப்படி ‘நிலவில் நூலகம்’ வைத்தாலாவது சற்றேனும் நூலக விழிப்புணர்வு ஏற்படலாம் ! எவ்வளவோ யோசிக்கிறோம், இத யோசிக்க மாட்டோமா !// அருமை! அருமை!!

Dimelo 21 October 2009 at 22:31  

Sabash Harrish.

பொன்னியின் செல்வன் 22 October 2009 at 19:13  

_/!\_ : ரவி சார், பின்னூட்டத்திற்கு நன்றிகள் ! அது வேறு ஒன்றும் இல்லை. சமீபத்திய திரைத்துறையின் போராட்டம் (அது, போராட்டமா ! .. அடடே ! அப்படித்தான் அவர்கள் சொல்கிறார்கள்.) மற்றும் அதன் விளைவு.

_/!\_ : ராம், பின்னூட்டத்திற்கு நன்றி நண்பா.

Post a Comment

நோக்கம் !

- எண்ணங்களை எழுதுவது

- நயம்பட நகைச்சுவையாய் எழுதுவது

- எளிதினும் எளிதாய் எழுதுவது

பொன்னியின் செல்வன்

My photo
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
பெரியார் கொள்கை பற்றாளன் | தமிழன் | திராவிடன் | பகுத்தறிவாளன் | நாத்திகன் | பூர்வீகம் : திருவாரூரில், கமுகக்குடி எனும் அழகிய ஆற்றோர கிராமம்.

மெயிலில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

நறுமனம்

பிற தோட்டம்