கத்… கத்… கத்தரிக்காய் !!கொளுத்தும் மதிய வெயிலில், தெருவில் காய்கறிக்காரன் காய்கறி விற்றுக்கொண்டு போகிறான்.
“கத்ரி……க்கா………………………….
முருங்கெ…….க்கா……………
வெண்டி……..க்கா……………….”

கொளுத்தும் வெயிலை, ஏன் கத்தரி வெயில் என்கிறார்கள் என்று குழம்பி கொண்டு இருந்தால்; ஒரு கத்தரிப்பூவை பார்த்தவுடன் அந்த சந்தேகம் தீர்ந்தது. விஷயம் இதுவாக இருக்கலாம்; கத்தரிப் பூவின் நடுவில் உள்ள மகரந்தம் நல்ல பளிச் மஞ்சள் வர்ணத்தில் கொளுத்தும் வெயிலின் நிறத்தில் இருக்கிறது. அதனால் இருக்குமோ ? 


காய்கறிக்காரனைக் கூப்பிட்டு, வீட்டம்மா,
“என்னப்பா; இந்த முருங்க்காய் எவ்வளவு?”
“கிலோ எட்டு ரூவா-ம்மா”
“வெண்டக்கா ?”
“கிலோ பத்து”
“கத்ரிகா?”
கிலோ ஒரு டாலர்!
என்னது? டாலரா? எந்த டாலர்? முருகன் டாலரா?
என்னம்மா. விவரம் தெரியாதா ? இது அமெரிக்கா கத்தரிக்கா-ம்மா; அதான்
மேலும் வெறுப்பேற்றும் விதமாய், காய்கறிக்காரன், “கோயம்பேடு மார்க்கெட் வரலாற்றிலேயே, முதன் முறையாய்; உலகத் தொழில் நுட்பத்துடன் தயாரான; வெளைச்சல் வந்து மூன்றே மாதத்தில்; விற்பனைக்கு வந்திருக்கும்மா !”, என்கிறான்.

இப்படியாக, தெருவில் கத்தரிக்காய் வாங்கி கொண்டு வீட்டுக்குள் வந்தால்; அமெரிக்காவில் இருந்து பேராண்டி, வீட்டுக்கு தொலை பேசுகிறான்; “என்ன, எப்படி இருக்கீங்க எல்லாம்? செய்தி கேட்டீங்களா? மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் அமெரிக்காவில் இருந்து இந்தியா வரப் போகிறதாமே?"
வீட்டில் இருந்து, “அட! அது ஓல்ட் நியூஸ்! அது, இப்ப நம்ம வீட்டுக்குள்ளேயே வந்திடுச்சு. அது தான் இப்போ லேட்டஸ்ட் நியூஸ்! எங்களுக்கு எங்கேப்பா தெரியுது அதெல்லாம். இந்த ‘கல்யாணம்’, ‘துளசி’, ‘கலசம்’, ‘கோலங்கள்’, ‘அரசி’, ‘ஆனந்தம்’ பாக்கவே எங்களுக்கு நேரம் சரியா இருக்குது ! இன்னிக்கு காய்கறி வாங்கறப்பதான், காய் கறிக்காரன் சொன்னான்; ஏதோ, அமெரிக்க கத்தரிக்காய்னு; சரி! அமெரிக்க கத்தரிக்காயாச்சே-ன்னு, ரெண்டு கிலோ கூடுதலாவே வாங்கி வச்சாச்சு! அந்த கத்தரிக்காயில Manufactured Date, Expiry Date எல்லாம் போட்டு இருக்குடா! அதெல்லாம் தமிழில் தான் அச்சிடனும்னு, எவன் வந்து சாப்பிடும் போது, சாப்பிட விடாம கைய பிடிக்கப் போறானோன்னு பயமா இருக்கு-டா!’

மேலே கூறியவை எல்லாம், கூடிய விரைவில், நாம் அன்றாடம் கேட்கும் சில சம்பாஷனைகள் ஆகக் கூடும்.

பின்னே, என்ன சார்? இந்தியாவில், இந்த மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் எல்லாம் வரப் போகிறதாமே. வரட்டுமே; பேஷா வரட்டுமே! இந்த ‘கத்தரிக்கா’ எல்லாம் ‘சுண்டக்கா’ மேட்டர் நமக்கு!! கத்தரிக்காய் தானே சார்! இது என்ன கத்ரினா கைஃப் மேட்டரா?
கத்ரினா கைஃப் ‘விலங்கியல்’ விவகாரம்; இந்த கத்தரிக்காய் வெறும் ‘தாவரவியல்’ விவகாரம் தானே. ஆமாம் சார், கத்ரினா கைஃப் ஒரு பெண் மான்; இந்த பெண் மானின் ஆண் மான் -  சல்மான்; இந்த மான்கள் விலங்கு வேட்டைக்கு கூட செல்லும். அப்போ இது விலங்கியல் தானே. விலங்கியல் தான் கொஞ்சம் கஷ்டம்; தாவரவியல் எல்லாம் சும்மா ‘அல்வா’ சாப்டற மாதிரி நமக்கு!

அணு என்றாலே அமெரிக்கா தான் போலும். அது ஆயுதமாக இருந்தாலும், காய்கறியாக இருந்தாலும் கூட!

கத்தரிக்காயின் பிறப்பிடம் இந்தியா. இந்தியாவுக்கே கத்தரிக்காயா ? சூரியனுக்கே டார்ச் லைட்டா ? ஒரு வலைப்பூவில் படித்த கேள்விகள், மிக நியாயமான கேள்விகள். அது அப்படியே இங்கே கொடுக்கப் பட்டுளது.

அது சரி, இப்போது கத்தரிக்காய்க்கு எங்கே தட்டுப்பாடு வந்தது? அதன் உற்பத்தியை அதிகரித்தே தீர வேண்டியது கட்டாயம் என யாராவது குரல் எழுப்பினார்களா ? எதற்காக இந்த விபரீத ஆசை புரியவில்லையா ?

என்ன நியாயமான கேள்விகள் ! இந்த மரபணு மாற்றிய கத்தரிக்காய் பற்றிய தகவல்களை, ‘தகவல் அறியும் சட்டத்தில்’ கேட்டார்களாம் சில சமூக ஆர்வலர்கள். ஆனால், அது ‘வர்த்தக ரகசியம்’ என்பதால் தர இயலாது என்று கூறி விட்டார்களாம். அவர்களுக்கு அது ‘வர்த்தக ரகசியம்’; நமக்கோ, வாழ்க்கையும் சந்ததியும் அத்தியாவசியம். வாழ்க்கை அத்தியாவசியத்தை விட ‘வர்த்தக ரகசியம்’ முக்கியம் எனில்; அதில் சந்தேகம் கொள்வதில் எள்ளளவும் தவறில்லை. அந்த சந்தேகத்தைத் தீர்க்க வேண்டியது அரசின் கடமை.

இப்படித்தான், அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு வரும் முன், வீட்டுக்கு தொலை பேசினான் நண்பன், “ஹ்ம்ம்.. வீட்டில் என்ன குழம்பு இன்னிக்கு?”
“கத்தரிக்காய் சாம்பார்-ங்க”
“ஹ்ம்ம்.. சரி.. யார் சாம்பார் வெச்சது? நீயா? பாட்டியா?’
“இன்னிக்கு, நானே காய் வெட்டி கொழம்பு வெச்சேங்க!”
“ஓ! அப்பிடியா .. ஹ்ம்ம்.. சேரி…. வரும் போது நான் வெளியில சாப்பிட்டு வந்திடரேன். எனக்கு சோறு வைக்க வேண்டாம்”
“இல்லீங்க. நீங்க வீட்டுக்கு வந்திடுங்க… இது ஒன்னும் அமெரிக்கா கத்தரிக்கா இல்ல; நம்ம ஊரு கத்தரிக்கா தான் பயபடாதீங்க!” என்றாள்.
அதற்கு நம்மாளு, “பயம் அமெரிக்கா மேல இல்ல !!!” என்றான்.
அதற்கு அவள், “பாருங்க! நான் பன்னின கத்தரிக்கா சாம்பாருக்கு பேடன்ட்(Patent) கூட கிடைக்கும்.  தெரிஞ்சுக்கங்க!’
அதற்கு நம்மாளு, “நீ பன்னின கத்தரிக்கா சாம்பாருக்கு பேடன்ட் (Patent) கிடைக்குதோ இல்லியோ; ஆனா, அத சாப்பிட்டா பேஷன்ட் (Patient) கிடைப்பாங்க !!”

……………………..……………………..……………………..……………………..
……………………..……………………..……………………..……………………..
……………………..……………………..……………………..……………………..


மரபணு ‘பேடண்ட்’ தெரிந்து கொள்வது இல்லை நம் நோக்கம்; நாமும், நம் நிலமும், தொடரும் சந்ததியும், சந்தடி சாக்கில் ‘பேஷன்ட்’ ஆகி விடக் கூடாது என்பது தான் நம் நோக்கம்! வேறொன்றுமில்லை !!

ஹரீஷ்

5 comments:

nraviprakash 24 October 2009 at 07:22  

//அந்த கத்தரிக்காயில Manufactured Date, Expiry Date எல்லாம் போட்டு இருக்குடா! அதெல்லாம் தமிழில் தான் அச்சிடனும்னு, எவன் வந்து சாப்பிடும் போது, சாப்பிட விடாம கைய பிடிக்கப் போறானோன்னு பயமா இருக்கு-டா!//
//இந்த ‘கத்தரிக்கா’ எல்லாம் ‘சுண்டக்கா’ மேட்டர் நமக்கு!! கத்தரிக்காய் தானே சார்! இது என்ன கத்ரினா கைஃப் மேட்டரா?/
நகைச்சுவை பிரமாதமாகக் கைவருகிறது உங்களுக்கு. கட்டுரை முழுக்கவே படித்து ரசித்தேன். ஒரு சில சாம்பிள்தான் மேலே கொடுத்துள்ளேன். விடாது தொடருங்கள்!

murali 26 October 2009 at 21:21  

katharika matternu .. relaxeda padikalamnu parthaal.. america anugundu.. marabanunu.. sappitatha serrika vidamateenga pola irruke hari

பொன்னியின் செல்வன் 26 October 2009 at 23:34  

_/!\_ ரவி சார்.. பின்னூட்டத்துக்கு நன்றி .. உங்கள் பின்னூட்டத்தால் ஊக்கம் அடைகிறேன்..

_/!\_ கத்தரிக்கா மேட்டர் தான்.. இருந்தாலும் கொஞ்சம் காரம் தூக்கலோ ??

murali 28 October 2009 at 19:15  

kaaram mattum karanam illai hari.. siripum .. innum sila varudam kalithu .. naam sapidum katharikai.. sediyil irunthu vantha..illai etho oru companyil katharikai mathiri.. kathirikai tastetuku.. seiyapatta...endra ninaipum. vivasaya nilam azhiyum vegathil..ithu athiga thooram illa gentleman

முனைவர்.இரா.குணசீலன் 26 October 2010 at 15:47  

தொடருங்கள்!

Post a Comment

நோக்கம் !

- எண்ணங்களை எழுதுவது

- நயம்பட நகைச்சுவையாய் எழுதுவது

- எளிதினும் எளிதாய் எழுதுவது

பொன்னியின் செல்வன்

My photo
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
பெரியார் கொள்கை பற்றாளன் | தமிழன் | திராவிடன் | பகுத்தறிவாளன் | நாத்திகன் | பூர்வீகம் : திருவாரூரில், கமுகக்குடி எனும் அழகிய ஆற்றோர கிராமம்.

மெயிலில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

நறுமனம்

பிற தோட்டம்